பட்டுநூல் கூடு உற்பத்தியில் பயன்பெற வேண்டுமா?…

மதுரையில் பட்டுப்புழு வளர்ப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. நெல், கரும்புக்கு புகழ்பெற்ற சோழவந்தானில் மாற்றுத்தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பு இருக்கிறது. பாரம்பரியமாக நெல், கரும்பு, தென்னை, வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.

நெல், கரும்பு, தென்னை, வாழைக்கு தண்ணீர் அதிகம் தேவை. சோழவந்தானில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. ஆனால் விவசாயப்பணிக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அமலானதில் இருந்து விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதன் காரணமாகவே மாற்றுத்தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டது.

விளைவு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இளம் புழு வளர்ப்பு மையம் உள்ளது. இங்கிருந்து “டபுள் ஹைபிரிடு’ ரகத்தை சேர்ந்த பட்டுப்புழுக்கள் கிடைக்கும்.

மஞ்சள் நிற பட்டுக்கூடு, வெள்ளை நிற பட்டுக்கூடு என இரு வகை உண்டு. வெள்ளை கூடு ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தலைமுடி அளவு மட்டுமே புழுக்கள் இருக்கும். இறுதியாக பத்தாயிரம் மடங்கு வளர்ச்சி பெறும். பட்டுப்புழுக்களுக்கு முக்கிய உணவு “வி1′ இனத்தை சேர்ந்த மல்பரி இலை.

இச்செடியை நடவு செய்து 53 வது நாளில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பலன் தரும். நெல் விவசாயத்தில் அதிகபட்சம் மூன்று போக விளைச்சல். பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மூலம் பட்டுக்கூடு ஆண்டுக்கு ஐந்து முறை கிடைக்கும். இது ஐந்து போக விளைச்சலுக்கு சமம்.

மதுரை சமயநல்லூரில் மத்திய பட்டு வாரியம் மூலம் மானியத்துடன் கூடிய வெள்ளை நிற பட்டுப்புழு வளர்ப்பில் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் முருகன். சொந்த நிலத்தில் மூன்று ஏக்கரில் தரமான மல்பரி செடிகளை வளர்க்கிறார். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகள் புழுக்களுக்கு இலை வைக்கிறார்.

“ஒரு கூட்டின் எடை 2 கிராம் வரை இருக்கும். 45 நாட்களுக்கு ஒரு முறை 250 கிலோ வரை பட்டுக்கூடு கிடைக்கும். 100 சதுர அடி பரப்பளவில் வளரும் புழுக்கள் படிப்படியாக 4 ஆயிரம் சதுர அடிக்கு பரவும். ஷெட் அமைக்கவும் மானியம் உண்டு. முறையாக பராமரித்தால் ஆண்டுக்கு பத்து முறை பட்டுக்கூடுகள் கிடைக்கும்” என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories