பட்டுப்புழு வளர்ப்பில் சாதிக்கும் இளைஞர்! பலமடங்கு இலாபம்!

கரும்பு விவசாயத்தில் இருந்து பட்டுப்புழு வளர்ப்பிற்கு மாறி நல்ல இலாபம் ஈட்டி வருகிறார் இளம் விவசாயி. கரும்பு செய்ய கூலியாட்களும் கிடைக்கவில்லை, விலையும் கிடைக்கவில்லை. வாழை நடவு மற்றும் இளம்பட்டுப்புழு வளர்ப்பு மையம் மூலம் லாபம் ஈட்டி வருகிறார், தேனி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன்.

இளம்புழு வளர்ப்பு மையம்:
மைசூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒரு மாத கால இளம்புழு (Larva) மற்றும் முதிர்புழு வளர்ப்புக்கான பயிற்சி (Trainng) பெற்றேன். மத்திய, மாநில அரசுகளின் ஒசூர், மைசூர், கிருஷ்ணகிரி மையங்களில் இருந்து பட்டு முட்டைகளை வாங்கி வந்து ஒருவார கால புழுவாக வளர்த்து விவசாயிகளுக்கு விற்பனை (Sales) செய்கிறேன். வெண் பட்டுக்கூடுக்கான இளம்புழு வளர்ப்பு மையத்திற்காக 3 ஏக்கரில் மல்பெரி மரங்களை (Mulberry trees) பயிரிட்டுள்ளேன் என்றார்.

பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் பத்தாண்டு அனுபவத்துடன் ஆறாண்டுக்கு முன்பாக மத்திய, மாநில அரசின் அனுமதியுடன் தொழில் நடத்தி வருகிறேன். இரண்டாண்டுகளாக இளம்புழு வளர்ப்பு மையம் அமைத்து லாபம் ஈட்டி வருகிறேன். ஒரு பட்டுக்கூட்டில் 800 மீட்டர் பட்டு நுால் இருந்த நிலையில், புதிய (பைவோல்ட்டின்) ரகத்தின் மூலம் 1200 மீட்டர் நுால் உருவாக்கப்படுகிறது. இளம்புழு வளர்ப்பு மையம் மூலம் விவசாயிகளுக்கு ஒருவாரம் வளர்ந்த புழுக்களை விற்பனை செய்கிறேன். அவற்றை 14 நாட்கள் வளர்த்தால் பட்டுப்புழு கூடுகட்ட தயாராகி விடும். 22வது நாள் கூடுகட்ட ஆரம்பித்தால் 28, 29 வது நாளில் கூடு ரெடியாகும் என்றார்.

பட்டுப்புழு முட்டைகள் விற்பனை:
ஒரு முட்டை தொகுதி என்றால் 500 முட்டைகள் இருக்கும். முட்டையில் இருந்து வெளிவந்த உடனே புழுக்கள் இளம் மல்பெரி இலைகளை (Young mulberry leaves) தின்னும். ஒரே தட்டில் 25 ஆயிரம் முட்டைகள் வளர்க்கலாம். அதன் பின் அவற்றை நான்காக பிரித்து ஒருவாரம் புழுக்களாக வளர்ப்பேன். மாதந்தோறும் 20ஆயிரம் முட்டை தொகுதிகள் உற்பத்தி செய்து தென்காசி, ஸ்ரீவில்லிபுத்துார், திருநெல்வேலி, தேனி, ஒட்டன்சத்திரம், நாகர்கோவிலைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறேன் எனவே,
100 முட்டை தொகுதியில் 80 கிலோ பட்டுக்கூடு கிடைக்கும். ஒரு கிலோவுக்கு ரூ.350 – 400 வீதம் விற்கின்றனர். இதில் ஒரு கிலோவுக்கு ரூ.200 செலவு போக மீதி லாபம் கிடைக்கும்.

செவ்வாழை விவசாயம்:
ஒன்றரை ஏக்கரில் நட்ட 1500 செவ்வாழைக்கன்றுகள் பலன் தருகின்றன. கிலோ ரூ.40 வீதம் நல்ல விலை கிடைக்கிறது. அடுத்து ஒன்றரை ஏக்கரில் 1500 கன்றுகள் நடவு செய்துள்ளேன். தற்போது, பட்டுப் புழுக்கள் தான் என்னை வாழ வைக்கிறது. பட்டுப் புழுக்கள் உற்பத்தியில் நல்ல இலாபம் கிடைப்பதால் பெரிய அளவில் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றேன் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories