உணவு மேலாண்மை
வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மாத வயதுக்கு மேல் உ.ள்ள செடிகளிலிருந்து முற்றிய இலைகள் காம்புடன் பறித்து உணவாக வைக்கவேண்டும். புழுக்கள் இலைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு காம்புகளை ஒதுக்கிவிடும் .பிறகு காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும் தினமும் முன்று முறை உணவளிக்க வேண்டும். மண்ணுடன் உள்ள இலைகளை கொடுக்கக்கூடாது.
பராமரிப்பு முறை
தோலுரிப்பு நேரங்களில் காற்றோட்டமாகவும் ஈரப்பதம் இன்றிஇருக்க வேண்டும்.
திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும் அதிவேகமான காற்றையும் அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்.