பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் – தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது!

பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்க ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம் என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கியுள்ளது.

பட்டுப் புழு வளர்ப்பு (Silkworm rearing)
தேனி மாவட்டத்தில் பட்டுப் புழு வளர்ப்பிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் பட்டுப்புழு, மல்பெரி செடி வளர்த்தல் லாபகரமான தொழிலாக அமைகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்டு உற்பத்தியில், தேனி 2வது இடத்தில் (2nd Place) உள்ளது. இந்த மாவட்டத்தில் 600ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்து புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

வெண் பட்டு கூடு கிலோ ரூ.260 ல் இருந்து ரூ.310 வரை சராசரியாக விலை போகிறது.
சுபநிகழ்ச்சிகள், பண்டிகைக் காலங்களை (Festival Season) முன்னிட்டு பட்டு ஆடைகள் பயன்பாட்டால் பட்டு நுால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பட்டு கூடு விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசு ‘ஒரு உற்பத்தி ஒருமாவட்டம்’ என்ற புதிய திட்டத்தின்படி, பட்டுப்புழு வளர்க்க தேனி, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.

இத்திட்டத்தால் பட்டு வளர்ப்பில் அதிக விவசாயிகள் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசின் மானியங்கள் கூடுதலாக கிடைக்கும். 200 விவசாயிகளை பட்டு புழு வளர்ப்பில் ஈடுபடுத்த திட்டம் தயாராகி வருகிறது என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories