பருத்திக்கு இம்முறை நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு!

பருத்திக்கு இந்த ஆண்டு நல்ல விலைக் கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மதிப்பிட்டுள்ளது.

கணிப்பு (Prediction)
சர்வதேச பருத்தி ஆலோசனை குழு, 2020-21ம் ஆண்டு உலக பருத்தி நுகர்வு 25.51 மில்லியன் டன்களாக இருக்கும் என கணித்துள்ளது. இது 2019-20ம் ஆண்டு நுகர்வைவிட 14 சதவீதம் அதிகமாகும் என்றார்.

330 இலட்சம் பொதிகள் (330 lakh packs)
இந்திய பருத்தி கழகத்தின் படி 2020-2ம் ஆண்டு இந்தியாவில் பருத்தி நுகர்வு 330 இலட்சம் பொதிகள் (ஒரு பொதி என்பது 170 கிலோ) என கணித்துள்ளது. இது கடந்த ஆண்டு நுகர்வைவிட 33 சதவீதம் கூடுதலாகும். இந்தியாவில் 2020ம் ஆண்டு பருத்தி உற்பத்தி 3600 இலட்சம் பொதிகள் இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது எனவே,

குறைய வாய்ப்பு (Less likely)
அதேவேளையில், பருத்தி இறக்குமதியின் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பருத்தி இறக்குமதி 4 இலட்சம் பொதிகளாகக் குறையும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியானது 54 இலட்சம் பொதிகளாக இருக்கும் என்றும், இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும்

3 பட்டங்கள் (3 Phase)
நூற்பாலைகள் மற்றும் வர்த்தகர்களிடம் ஜனவரி 31 2021 வரையுள்ள மொத்தக் கையிருப்பு 247.25 இலட்சம் பொதிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய மூன்று பருவங்களில் பருத்தி பயிரிடப்படுகிறது.

தற்போது ஆடிப்பட்ட வரத்து குறைந்து மாசிப்பட்டம் விதைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராக திகழ்கிறது. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய இரகங்கள் ஆர்.சி.எச்., பி.டியருக்கு காபி மற்றும் டி.சி.எச் ஆகியவை ஆகும். பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப குஜராத், மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள் முதல் செய்கின்றனர்.

பல்கலைக்கழகம் கணிப்பு (University prediction)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) வேளாண்மை மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ரூ.6,900 வரை (Up to Rs.6,900)
பொருளாதார ஆய்வின்படி தற்போதைய சந்தை நிலவரம்
தொடர்ந்தால் நல்ல தரமான பருத்தி விலை மார்ச் முதல் ஜூன் 2021 வரை குவிண்டாலுக்கு ரூ.6500 முதல் ரூ.6900 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

சேமித்து விற்பனை (Storage and sale)
தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடர்ந்தால் விலைஉயர்வுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் ஜூன் 2021 மாதத்தில் பருத்தியைச் சேமித்து விற்பனை செய்யலாம். மாசிப் பட்டத்தில் சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்னறிவிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் விதைப்பு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories