வேர் அழுகல் நோய் தாக்கப்பட்ட செடியையும் சுற்றியிருந்த செடிகளை வேருடன் பிடுங்கி எறிந்து விட வேண்டும். எதிர்வினை பூ சாணத்தைப் பயன்படுத்தி வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ,புளோரசன்ஸ் ஆகியவை எதிர் வினை பூஜா ங்களையும் பேசில்லஸ் சப்டிலிஸ் எனப்படும் எதிர் வினை பாக்டீரியாவை பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்கத்தை தடுக்க முடியும். 50 கிலோ தொழு உரத்துடன் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், புளோரசன்ஸ் ஆகியவற்றை தலா ஒரு கிலோ கலக்க வேண்டும். இதில் தண்ணீர் தெளித்து 15 நாட்கள் வைத்திருக்க வேண்டும் .அவை காய்ந்து விடாமல் ஈரப்பதம் இருக்குமாறு கவனித்துக்கொள்வதுதால் நுண்ணுயிரிகள் பெருகி வளரும்.
இந்த கலவையை வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளுக்கும் அதை சுற்றி உள்ள செடிகளுக்கும் வட்டப்பாத்தி அமைத்து விட வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் அரை கிலோ வீதம் கலவையை சுற்றிவிட்டு மூடிவிடவேண்டும் .இதே போல ஆண்டுக்கு 3 முறை தொடர்ந்து செய்ய வேண்டும் .துத்தநாக குறைபாடும் வேரழுகல் நோய் பரவலுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் ஏக்கருக்கு 4 கிலோ துத்தநாக சல்பேட்டை மண்ணில் இடவேண்டும் .உயிரியல் கட்டுப்பாட்டு கலவையும் துத்தநாக சல்பேட்டையும் ஒரு சேர பயன்படுத்தக்கூடாது.