மழைக்காலங்களில் தரமான பருத்தி விதைகள் தேர்வு செய்தல்!

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை (Cotton Seeds) பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என கிருஷ்ணகிரி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

பருத்தி விதைகள் (Cotton Seeds)
இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் க.லோகநாயகி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள், விதைத்தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

இந்த மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். என்றார்.
எனவே வீரிய பருத்தி மற்றும் பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கும்போது விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் வாங்க வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பருத்தி ரகத்தின் விவர அட்டையில் பயிர் செய்ய உகந்த பருவம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்களை சரி பார்த்து வாங்கவும் என்று கூறினார்.

விதை முளைப்புத் திறன் அறிய விரும்பும் பட்சத்தில் விதை விபரங்களுடன் ஒரு மாதிரி ரூ.30 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories