சினை பன்றிகளை பராமரிப்பு

பன்றிகளின் சினைக்காலம் சராசரியாக 114 நாட்கள் ஆகும். சினை பன்றிகளை தனியாக மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் பராமரிக்கவேண்டும். ஒவ்வொரு திணைக்கும் மூன்று சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு நாளும் சினை பன்றிகளை மேய்ச்சல் தரையில் அல்லது திறந்த வெளியிலோ சற்று நேரம் திறந்து விடுவது நல்லது .மேய்ச்சல் தரை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் .குட்டி போடும் நாள் நெருங்கியவுடன் பன்றிகளை நன்றாக கூர்மையாக கவனிக்க வேண்டும். தோராயமாக குட்டி போடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அவற்றிற்கு தீவனம் எதுவும் அளிக்கக்கூடாது.

குட்டி போடுதல்

பன்றிகள் குட்டி போடும் போது கண்டிப்பாக ஒருவர் உடன் இருக்க வேண்டும். முழுமையாக பன்றிகள் குட்டி போடுவதற்கு இரண்டு அல்லது நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக குட்டி போடும் போது குட்டிகளை எடுத்து அவற்றுக்கென உள்ள இடத்தில் கதகதப்பாக வைக்க வேண்டும். ஒவ்வொரு பன்றிக் குட்டிகளின் மூக்கு மற்றும் வாயில் உள்ள கோழை போன்ற திரவத்தை சுத்தம் செய்ய வேண்டும். குட்டிகளின் தொப்புள்கொடி அவற்றின் தொப்புளிலிருந்து 2 அல்லது 5 சென்டிமீட்டர் நீளம் விட்டு முடிச்சுப்போட்டு கிருமிநாசினி கொண்டு தொடக்கப்பட்ட கத்தரிக்கோலால் கத்தரித்து அந்த இடத்தில் அயோடின் கரைசல் தடவ வேண்டும்.

குட்டி போட்ட பிறகு குட்டிகள் தாயிடம் பாலூட்ட அனுமதிக்கலாம் .குட்டி போட்ட இரண்டு நாளில் குட்டிகள் தங்களுக்கு பால் காம்பைதேர்வு செய்து கொள்ளும்.ஒரு நாளில் குட்டிகள் எட்டு முதல் 10 முறை தாயிடம் பால் குடிக்கும். குட்டி போட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு குட்டிகள் பால்குடிக்கும் போது தாய் பன்றிகள் நசுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories