பன்றி வளர்ப்பு!

பன்றி வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகும்.

வேளாண்மையில் பன்றியின் பங்கு சற்று பெரிது என்றாலும் பன்றியின் இறைச்சி மற்றும் ரோம மூலமாக அதிக வருமானம் பெறலாம்.

எளிய கட்டிடம் மற்றும் கொட்டகை அமைப்பில் சரியான தீவனமும் முறையான நோய் பராமரிப்பும் செய்தால் பன்றி வளர்ப்பு மிகச்சிறந்த லாபம் தரக்கூடிய தொழிலாக விளங்கும்.

பன்றிகள் பொதுவாக நாம் சாப்பிட உகந்தது இல்லாத உணவுப் பொருட்கள், கழிக்கப்பட்ட தானிய வகைகள் தேவையற்ற காய்கறிகள் ,கிழங்கு வகைகள் ,கீரைகள் ,வீணடிக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை உட்கொண்டு நல்ல புரதச்சத்து மிகுந்த இறைச்சியை நமக்கு தருகின்றன.

பன்றியின் கழுவும்,சிறுநீரும் நல்ல உரமாக விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பன்றி வளர்ப்பின் நன்மைகள்!

பன்றிகளை எந்த சூழலிலும் எந்த பண்ணையில் எளிதாக வளர்க்கலாம்.

பன்றிகளுக்கு மலிவான கொட்டகை மற்றும் சாதனங்கள் போதுமானவையாகும்.

பன்றிகள் வேகமாக வளரும் திறன் கொண்டது .ஒரு நாளைக்கு 350 முதல் 600 கிராம் வரை எடை அதிகரிப்பதால் சிறிய காலத்தில் அதிக பயன் கிடைக்கின்றது.

பண்ணைக் கழிவுகள் மற்றும் சமையல் கூட கழிவுகளையும் தீவனமாக பயன்படுத்தி அதிக இறைச்சியைக் கொடுக்கும் திறன் பெற்றது.

பன்றிக் கழிவுகள் மீன்களுக்கு உணவாகவும் பயிர்களுக்கு சிறந்த எருவாகவும் பயன்படுகின்றன.

பன்றி இறைச்சியை 65 சதவீதத்திற்கும் குறையாமல் அளிக்கும்.

பன்றி இறைச்சி கொழுப்பு குறைவான நீர்ச்சத்து அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும்.

பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால் கோழித்தீவனம் சோப்பு பெயிண்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பன்றிவளர்ப்பினால்6 முதல் 8 மாதங்களில் இருந்து வருமானம் கிடைக்கும்.

பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தைகளில் அதிக அளவில் சந்தை வாய்ப்பு உள்ளது.

பன்றிகளுக்கு தேவையான நீரின் அளவு!

8 வார வயதுடைய பன்றிகளுக்கு நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும்.

20 வார வயதுடைய பன்றிகளுக்கு நாள் ஒன்றுக்கு 7 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும்.

28 வார வயதுடைய பன்றிகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும்.

சினை பன்றிகளுக்கு முதல் மூன்று மாதங்கள் வரை நாளொன்றுக்கு 12 லிட்டர் தண்ணீரும் கடைசி மூன்று மாதங்களுக்கு 15 லிட்டர் தண்ணீரும் அளிக்க வேண்டும்.

5 முதல் 8 குட்டிகள் என்று பாலூட்டும் பன்றிகளுக்கு நாளொன்றுக்கு 25 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும்.

10 முதல் 12 குட்டிகளை ஈன்று பாலூட்டும் பன்றிகளுக்கு நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும்.

ஆண் பன்றிகளுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories