அனைத்து பட்டங்களிலும் பயிரிடக்கூடிய கேழ்வரகை சாகுபடி செய்யும் முறை…

கேழ்வரகு ஒரு ஒருவித்திலை தாவரம். கவர் நிலங்களில் கூட நன்கு வளரக்கூடிய ஒரே பயிர் கேழ்வரகு மட்டுமே. கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.

வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் கேழ்வரகும் ஒன்று. அதிக கால்சியம் சத்து இருக்கக்கூடிய தானியம் இது தான். இதனால் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கேழ்வரகை அனைத்து பட்டங்களிலும் பயிரிடலாம். ஒரு வித்திலை தாவரங்களில் சத்துக்கள் குறைவாக தேவைப்படும் பயிர் இதுதான். தழை சத்து மட்டும் சற்று கூடுதலாக தேவைப்படும். கேழ்வரகு மூன்று அடி உயரம் வரை வளரும்.

கேழ்வரகு நடவு செய்யும் முறை, 3×8 அடி அளவில் மேட்டு பாத்திகளில் விதை தூவி நாற்று விடப்படுகிறது. ஏக்கருக்கு குறைந்த பட்சம் ஒன்றரை கிலோ விதை தேவைப்படும்.

பதினைந்து நாட்களான நாற்றை வயலில் நடுவது சிறந்தது. இதனால் அதிக பக்க கிளைப்பு தோன்றும். நாற்று வளர்ச்சி குறைவாக இருந்தால். நாற்று விட்ட பத்தாம் நாள் மீன் அமிலம் வேரில் இட்டால் மூன்றாவது நாளே வேகமாக வளர்ந்து விடும். ஒற்றை நாற்று மட்டுமே நடவேண்டும்.

செம்மை நெல்நடவு முறையை பின்பற்றி கேழ்வரகு நடுவது சிறந்தது. கயிறு பிடித்து 25×30 செமி இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு செய்யும் போது அளவிற்கு அதிகமாக தூர்கள் வரும்.

கேழ்வரகின் வயது நூறு நாட்கள். தை பட்டத்தில் நாட்டால் சிறிது முன்னதாகவே அறுவடைக்கு வர வாய்ப்புகள் அதிகம். கேழ்வரகிற்கு இரண்டு களைகல் வரை தேவைப்படும். இரண்டு கலைகள் எடுப்பது சிறப்பு.

கேழ்வரகில் பூச்சி தாக்குதல் மிக குறைவு. அதனால் கற்பூரகரைசல் தெளித்தால் போதுமானது. மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து வேரில் அளிப்பதன் மூலம் அதிக கிளைப்புகள் தோன்றும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

கேழ்வரகு தட்டை (தண்டு)அறுத்து காயவைத்து போர் போட்டு வைக்கலாம். சிறிது இனிப்பு சுவை உள்ளதால் மாடுகள் விரும்பி உண்ணும். இது வறட்சி காலத்தில் கால்நடைகளை காப்பாற்ற வசதியாக இருக்கும்..

கதிர் அறுவடைக்கு பின்னர் தட்டை மடக்கி உழுது விடுவதால், அடுத்த பயிர் நன்றாக வளரும். கேழ்வரகின் வேரில் இயற்கையாகவே VAM என்னும் வேர் பூஞ்சானம் இருப்பதால் இதையடுத்து வேற்கடலை பயிரிட்டால் நல்ல திரட்சியான பருப்புகள் உடைய காய்கள் உருவாகும். எண்ணிக்கை மற்றும் எண்ணெய் சத்தும் அதிகமாகும்.

கேழ்வரகை வாரத்தில் மூன்று நாள் உணவில் பயன்படுத்தினால் அனைத்து வியாதிகளையும் தடுக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். இரத்த சோகை நோய் முற்றிலும் வராது. மலச்சிக்கல் ஏற்படாது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories