இறவை பாசனத்தில் கம்பு சாகுபடி அமோக விளைச்சல்!

கோடை காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தமிழகம் முழுவதும், இறவை பாசனத்தில், கம்பு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

கோடையில் குளிர்ச்சி (Cooling in the summer)
சிறுதானிங்களில் ஒன்றான கம்பு நம் உடலுக்கு தெம்பு கொடுப்பது என்றே சொல்லலாம். குறிப்பாகக் கோடை காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய உடல் சூடு பிரச்னைக்கு சிறந்தத் தீர்வாக அமைகிறது கம்பு.
கம்மங்கூழ்
அதனால்தான் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், நம்மில் பலரது வீடுகளிலும் கம்மங்கூழ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் கம்மங்கூழ் விற்பனை களைகட்டும்.

கம்பு சாகுபடி (Rye cultivation)
இதனைக் கருத்தில்கொண்டு,கோவை மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், இறவை
பாசனத்துக்கு, தானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கோடை காலத்தில், கம்மங்கூழ் அதிகமாகப் பயன் படுத்துகின்றனர்.
அமோக விற்பனை (Sales Increases)
அனைத்து சாலைகளிலும், இத்தகைய கூழ் விற்பனை ஏப்ரல் மே மாதங்களில், ஜோராக நடக்கிறது. எனவே இந்த சீசனில் கம்பு தாணியத்துக்குத் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் திட்டமிட்டு இறவை பாசனத்தில் இச்சாகுபடியை மேற் கொள்கின்றனர் என்றார்.

வீரிய விதைகள் (Active seeds)
அதிக விளைச்சலைக் கருத்தில்கொண்டு வீரிய ரக விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயிகள் கருத்து (Farmers comment)
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை காலத்தில் கம்பு தானியத்துக்கு நல்ல விலை கிடைக்கும். அறுவடைக்குக் கதிர்கள் தயாரானதும், காலை மற்றும் மாலை நேரங்களில் விளைநிலங்களில் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories