ஊடுபயிர் தேர்வு செய்யும் பொழுது பயிரிடப்படும் பகுதி, பருவம், மண் வகைக்கு ஏற்ற வாறு தேர்வு செய்யவேண்டும். குறுகியகால பயிராக இருக்க வேண்டும்.
வேகமாக வளர்ச்சி அடைந்ததாகவும் கு ட்டை ஆனதாகவும் இருக்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் தேவை உடையதாக இருக்க வேண்டும்.
அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும். மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிரிகளுக்கும் பயிர்களான பயறு வகைகளை தேர்வு செய்யலாம்.
ஊடுபயிரை அறுவடை செய்யும் முறை
ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். குறைந்த கால பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்துவிடலாம்.
ஊடுபயிர் கலைகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதோடு களை எடுக்கும் செலவு மிச்சப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல ஒரே நேரத்தில் இரட்டிப்பு லாபத்தையும் பெறலாம் மேலும் ஊடுபயிர் சரியான தருணத்தில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.