கூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்!

குறுகிய காலப் பயிர்களில் ஒன்று தான் பாசிப்பயறு (Alfalfa). இதில் பல இரகங்கள் உண்டு. 2019ல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக வம்பன் – 4 பாசிப்பயறு இரகம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரகம் அதிக மகசூலைத் தரும் என்பதால், விவசாயிகளுக்கு வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது என்றார்.

70 நாட்களில் அதிக மகசூல்:
‘வம்பன் – 4’ ரக பாசிப்பயறு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை முனைவர் காயத்ரி சுப்பையா (Gayathri Subbaiya) பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாக, 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரகம், வம்பன் – 4 பாசிப்பயறு. இது, 70 நாட்களில் அறுவடைக்கு (Harvest) வந்துவிடும். ஆடி, புரட்டாசி, மார்கழி, தை மற்றும் சித்திரை பட்டங்களில் பயிரிடலாம். மஞ்சள் தேமல், சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன் மற்றும் இலைசுருள் நோய்க்கு (Leaf curl disease) அதிக எதிர்ப்பு திறனும் உடையதாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு, 410 கிலோ மகசூல் (Yield) கொடுக்கும். இதுவே, வம்பன் – 3 ரகத்தை எடுத்துக் கொண்டால் 350 கிலோ மகசூலைத் தரும். கோ – 8 ரகத்தில், 338 கிலோ மகசூல் தரக்கூடியது. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பிட்டால் வம்பன்-4 இரகப் பாசிப்பயறு கூடுதல் மகசூல் தரக்கூடியது எனவே,

பலமுறைப் பூக்கும்:
காரீப், ராபி, கோடை பருவங்களில் கூடுதல் மகசூல் கொடுக்க கூடியது. வம்பன்-4 ரகம், பல முறை பூ பூக்கும் தன்மை உடையது. காய்களில் இருந்து, விதையும் எளிதில் உதிராது. விவசாயிகள் இந்த இரகத்தைப் பயிரிட்டால் அதிக மகசூல் பெறுவதோடு, நல்ல இலாபமும் கிடைக்கும். இந்த இரகம் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனே, அருகிலுள்ள வேளாண் துறை அலுவலர்களை அணுகி ஐயத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புக்கு
94420 91883

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories