தட்டை பயறு சாகுபடி முறை

அதிகம் தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

வயலைஇரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன் மூலம் மண் வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம் .விதைத்த பிறகு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 25 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திறம் அல்லது கார்பன்டாசிம் அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது ஒரு கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு மூன்று நாள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண் மற்றும் பருவ நிலையை பொறுத்து 10 அல்லது 15 நாள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும் .40 நாட்களில் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories