#பயறுவகை பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பம்

#பயறுவகை பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பம்
தற்பொழுது பருப்பு விலை, உளுந்து விலை கூடுதலாக விற்பதால் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து அதிக விலையை பெறலாம் பருத்தி சாகுபடி செய்யும் பொழுது வாய்க்கால் பகுதியிலும், வரப்பு பயிராகவும் உளுந்து, தட்டப்பயறு போன்றவை சாகுபடி செய்தால் சாறுறிஞ்சும் பூச்சியின் தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்;
நமக்கு இடைவருமானமாகவும் அமையும் பயிர் பாதுகாப்பு செலவும் குறையும் ஆகவே விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயறு சாகுபடி செய்ய முன்வரலாம். பயிர்வகை பயிர்களுடைய சாகுபடி தொழில் நுட்பம் எல்லா பயிருக்குமே ஒன்றுதான்.
உளுந்து சாகுபடி தொழில் நுட்பம்
ரகம் : டி.எம் வி 1, டி 9 , கோ 5, வம்பன்
விதையளவு – 8 கிலோ / ஏக்கர்
நிலம் தயாரித்தல்
நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மண் நன்றாக கட்டிகள், களைகள் இல்லாதவாறு 3முதல் 4 உழவுகள் வரை போட வேண்டும்.
அடியுரம்
ஒரு ஏக்கருக்கு ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும். இத்துடன் 30 கிலோ டி.ஏ.பி. உழவுசால் மூலம் போட வேண்டும்.
விதை நேர்த்தி
உயிர்உர விதை நேர்த்தியாக ரைசோபியம். 200 கிராம்;;, பாஸ்போபாக்டீரியா 200 கிராம் இவற்றை ஆறிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்
.
உயிர்உரம்
ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ, மக்கிய தொழுவுரம் 100 கிலோ உடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது போடவேண்டும்
நுண்ணுரம்
ஒரு ஏக்கருக்கு பயறுவகை நுண்ணுரம் 5 கிலோ 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட வேண்டும்.
பயிர் இடைவெளி
30 ஓ 10 செ.மீ. ( 33 செடிகள் / ஒரு சதுர மீட்டருக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். )
களை நிர்வாகம்
உளுந்து நடவு செய்த 15ம் நாள் ஒரு களையும், 30ம் நாள் ஒரு களையும் எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை எடுக்காமலிருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
நீர் நிர்வாகம்
விதை முளைக்கும் பருவம் பூ பூக்கும்பருவம் காய் வளர்ச்சிபருவம் ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்
அசுவிணி தாக்குதலின் அறிகுறி
இளம் தளிர்கள்,பூக்கள், மொட்டுகள், பிஞ்சுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும். பூக்களும் பிஞ்சுகளும் உதிரும். செடிகளை சுற்றி எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்;
பச்சைக்காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி
இதன் பழுப்பு நிற தாய்ப்பூச்சி சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில் தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள் செலுத்தி வட்டவடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன
.
கட்டுப்படுத்தும் முறை
விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் அடிக்கலாம். ஒவ்வொன்றிலும் அரைக்கிலோ அளவில் எடுத்து அவற்றை நன்றாக அரைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம்
அல்லது
தாவர இலைச்சாறு அடிக்கலாம் ஒரு டேங்குக்கு 200 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
நாவாய்ப்பூச்சி தாக்குதலின் அறிகுறி
இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்;
தண்டு ஈ தாக்குதலின் அறிகுறி
கருமை நிற தாய் ஈ தன் முட்டைகளை இளம் தளிர்களில் இடும். வாடும் செடிகளை கவனித்தால் தண்டு பகுதி நசிந்து துளைக்கப்பட்டு இருக்கும். தண்டின் உள்ளேயே கூட்டுப்புழு காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
தண்டில் உள்ள புழுக்களை சேகரித்து கொன்று விடுதல் குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி தெளிக்கலாம்.
மஞ்;சள் இலைத்தேமல் நோய் தாக்குதலின் அறிகுறி
இலைகளில் தேமல் போன்று மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் புள்ளிகள் காணப்படும். தீவிரமாக தாக்கப்பட்ட செடிகளில் இலைகள் சிறுத்து பூ மற்றும் காய்கள் பிடிக்காமல் இருக்கும். பிடித்த காய்கள் விதை ஊறாமல் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை
நோய் தாக்கிய செடிகளை பிடிங்கி அழிக்கவும். நோய் எதிர்ப்பு ரகங்களை பயிரிடவும். 3 நாள் புளித்த தயிர் 100 மில்லி / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறி
இலைகளின் இருபுறங்களிலும் சிறிய வெண்மை கலந்த சாம்பல் நிறமான புள்ளிகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
நோய் தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் கார்பன்டிசம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேர் அழுகல் நோய் தாக்குதலின் அறிகுறி
வயலில் செடிகள் காய்ந்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை மக்கிய தொழுவுரம் 100 கிலோவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது தூவி விட வேண்டும்.
டைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்தும் கட்டுப்படுத்தலாம்
சேமித்து வைத்தல்
100 கிலோ விதைக்கு 3 கிலோ அரைத்த வேப்பங்கொட்டைத்தூளை கலந்து வைத்து வண்டின் சேதத்தைக் குறைக்கலாம்.
காற்று புகாத பையில் சேமித்து வைக்க வேண்டும்
முக்கிய குறிப்பு
உளுந்து பயிர் நடவு செய்தால் அடுத்த பயிருக்கு மகசூல் கூடும், அறுவடை செய்யும் பொழுது உளுந்தம் பயிரின் வேர்பகுதியை காட்டிலே விட்டு விடவேண்டும்
இலைவழி தாவர உணவு
இலைவழித் தாவர உணவாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மல்டிகே, பயிர் பூ பூக்க தொடங்கும் பருவத்திலும், பூப் பருவத்திலும் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories