ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா சாகுபடி பற்றி தெரிஞ்சுக்குங்க..

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொய்யா ஒரு அருமருந்தாகும். இது ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஒரு கொய்யா உண்பதால் அணைத்து வகை வயிறு சம்மந்தமான நோய்கள் கட்டுப்படுத்த படுகின்றன. கொய்யாவை இயற்கை முறையில் வளர்ப்பதால் சுவை மிக்க பழங்கள் கிடைக்கின்றன.

வைட்டமின் C. சத்து அதிகம் உள்ள பழம். தவறாமல் அனைவரது வீடுகளிலும் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய பழ மரம்.

கொய்யாவில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், லக்னோ – 49 வகை அதிகம் பயிரிடப்படுகிறது அதிக மகசூல் தரவல்லது. இந்‍த ரகம் வருடம் முழுவதும் காய்க்கும் தன்மை உடையது.

சிலர் தாய்லாந்து கொய்யா பயிர் செய்கின்றனர். இவை அளவில் பெரியதாக இருப்பதால் அதிகம் பிரபலமாகவில்லை.

கொய்யாவை பெரிய அளவில் வியாபாரத்திற்க்காக நடுவு செய்யும்பொழுது, சாதாரண நடவு முறையில் 15×15 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5×5 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய படுகிறது. தண்ணீர் தேங்காத அனத்து மண்ணிலும் நன்கு வளரும்.

கொய்யாவிற்கு நுன்ஊட்ட சத்துக்கள் அதிகம் தேவை படும். இதனால் அவ்வப்போது நுன்ஊட்ட சத்துக்கள் கொடுக்க வேண்டும்.

கொய்யாவை அதிகம் தாக்குவது மாவுபூச்சி. கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் மாவுபூச்சியை எளிதாக கட்டுபடுத்தலாம்.

பழ அழுகல் நோய் கொய்யாவை தாக்கும் நோய்களுள் ஒன்று. இந்நோய் பழ ஈக்களால் ஏற்படுகிறது. இந்த வகை ஈக்கள் தங்களின் முட்டைகளை கொய்யாவின் மேற்பரப்பில் இடுகிறது, இதிலிருந்து தோன்றும் புழுக்கள் உள்ளே சென்று இந்த அழுகல் நோயை உண்டாக்குகிறது.

ஆரம்பம் முதல் கற்பூர கரைசல் கொடுப்பதால் இந்த பழ ஈக்களை முற்றிலும் தடுக்கலாம். மீன் அமினோ அமிலம் தெளிப்பதால் பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்தலாம். இதனால் திரட்சியான மற்றும் சுவை யான பழங்களை பெறலாம்.

பழஜீவாமிருதம் கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். உயிர் உரங்கள் கண்டிப்பாக இடவேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories