பெயர் காரணம் :
சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம் (Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தனித்துவம் :
“சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும். இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani) செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில் வேளாண்மைச் செய்யப்படுகிறது.
சீரகச் சம்பா பயன்கள் :
* எளிதாக செரிப்பதோடு (Easily Digestable), இரைப்பை (Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.
* வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும்.
* குடல்புண் (Ulcer), வயிற்றுப்புண் (Severe), வாய்ப்புண் (Mouth ulcer) குணமாகும்.
* கண் நரம்புகளுக்கு (Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்.
* இரத்தத்தை (Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.