சாம்பல் பூசணி சாகுபடி செய்ய ஏற்ற ரகம் முதல் விதைப்பு ஒரு பார்வை..

சாம்பல் பூசணி சாகுபடி

இரகங்கள் :

கோ 1 மற்றும் கோ 2

மண் மற்றும் தட்பவெப்பநிலை :

நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மானாவாரியில் பயிர் செய்ய களிமண் கலந்த நிலம் சிறந்தது. சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ விதைகள், விதைகளை விதைக்கும் முன்னர், ஒரு கிலோ விதைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பின்னர் ஆறு நாட்கள் வைத்திருந்து பிறகு விதைக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல் :

நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவு செய்தபின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள நீண்ட வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். இந்த வாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ நீள, அகல, ஆழ அளவு குழிகளை எடுக்கவேண்டும்.

இடைவெளி :

2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை இரண்டு மீட்டர் செடிக்குச்செடி 1.5 மீட்டர்)

விதைப்பு :

ஒரு குழிக்கு 3-6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டு மற்ற செடிகளை நீக்கிவிடவேண்டும்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories