செம்பருத்தி விதைத்தல்

மண்
செம்மண் கரிசல் மண் நிலங்களில் நன்றாக வளரும் தன்மை கொண்டது.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்தை இட்டு நிலத்தை நன்றாக உழுது மண் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு செடிக்கு செடி 6 வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம் ஒரு கிலோ மக்கிய தென்னை நார் ஆகியவற்றை இட்டு தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும்.

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 1200 செடிகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழியில் செம்பருத்தி கன்றுகளை கூறி மையப்பகுதியில் நடவு செய்து மண்ணை அணைத்து தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்யும் போதுபாய்ச்சவேண்டும் .பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .செடிகள் வளர்ந்த பின்பு 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories