நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

தற்போது மானாவாரியில் பெரும்பாலும் நிலக்கடலை பயிரை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது பொதுவாக மானாவாரியில் பயிரிடும்போது அதிக பராமரிப்பு செய்யப்படுவதில்லை. நிலக்கடலை பயிருக்கு முறையாக இடுபொருள்கள் பயன்படுத்தி வந்தால் அதிக மகசூல் ஈட்ட முடியும்.

நிலக்கடலை தானாகவே வளர்ந்து மகசூல் கொடுக்கும். தொழு உரம், பஞ்சகாவியா, மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

தொழு உரம் விதைப்பதற்கு முன்பு இட வேண்டும் எப்படி என்றால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 5 டன் தொழு உரம் இடவேண்டும் நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும் தொழு உரம் இட்டு கடைசி உழவு செய்ய வேண்டும்.

பஞ்சகாவ்யா கரைசலை மாதம் ஒருமுறை நீர் பாசனத்தில் கலந்து விடவேண்டும் இல்லை எனில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யாவை கலந்து தெளிக்க வேண்டும் கடலை திரட்சியாக பஞ்சகவ்ய கரைசல் வழிவகை செய்யும்.

களை எடுத்தபிறகு மண்புழு உரம் இட்டு மண் அணைக்க வேண்டும் மண் ஈரமாக இருக்கும் போது முழு பலன் கிடைக்கும் .நிலக்கடலைக்கு மண்புழு உரம் இடுவதால் பயிருக்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்து நிலக்கடலை விழுதுகளில் எளிதாக இறங்கி அதிக எண்ணிக்கையில் கடலையும் உருவாவது போல் அல்லாமல் திரட்சியாகவும் கடலை கிடைக்கிறது மேலும் எண்ணெய் சத்து அதிகமாக இருக்கும்.

இதனுடன் முறையான பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories