ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும் .அதேபோல மகசூல் முடிந்தவுடன் ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும்.
மீன் அமிலம் கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
ஜீவாமிர்தக் கரைசலை வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் மரத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும். நிறைய பூக்கள் உண்டாகி காய்கள் வைக்கும்.
மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாமா எந்த வகை கீரைகள் பயிரிடலாம்.
மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாம்.
கொத்தமல்லி, புதினா ,பாலாக்கீரை ,காசினிக்கீரை, தண்டுக்கீரை,சிறுகீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி கீரை ஆகியவற்றை மாடி தோட்டத்தில் பயிரிடலாம்.