விவசாயிகளே! இது உங்களுக்கு தான்! புயல் காலத்தில், பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள்!

விவசாயிகள், வெள்ள பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள்:
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி வழங்கியுள்ள ஆலோசனைகள்: நிவர் புயல் (Nivar Cyclone) காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் உள்ள பயிர்களை பாதுகாத்து பயிர் சேதத்தை (crop damage) தவிர்க்க முடியும். எனவே விவசாயிகள் வயலில் உள்ள வடிகால் பகுதியில் தடைகள் இருந்தால், அதனை அகற்றி அருகில் உள்ள குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் வெள்ளநீர் இலகுவாக சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்ற வெள்ள அபாய நேரங்களில் நிலங்களில் சத்து இழப்பு (lose nutrients) ஏற்பட்டு பயிர் பாதிக்க நேரிடும் என்றார்.

இதனை சரிசெய்ய நெற்பயிராக இருத்தால் வெள்ள நீரை வடித்து, பின் இலை வழி உரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா (Urea) கரைசல் மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட்டு (Zinc sulphate) , 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். இக்காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் இலை உறை நோயை கட்டுப்படுத்த புரப்பிகோனசோல் (Propiconazole) 200 மில்லி அல்லது கார்பன்டசிம் 200 கிராம், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும் என்றார்.

டி.ஏ.பி., இலை வழியாக உரம்:
உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகையாகப் பயிராக இருப்பின், 2 சதவீதம் டி.ஏ.பி., (DAP) இலை வழியாக உரமாக கொடுக்கலாம். காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து இருந்தால், தண்ணீரை வடிய செய்யவேண்டும். தென்னை (Coconut) சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னங்குருத்துப்பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேற்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து விவசாயிகள் பயிர்களை பாதுகாத்தால் மகசூல் (Yield) குறையாதிருக்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories