வைகாசி மாதத்தில் என்ன காய்கறி பயிர் செய்யலாம்

செடி முருங்கை ,கத்திரி, தக்காளி, கொத்தவரை போன்ற பயிர்களை வைகாசியில் பயிரிடலாம்

முருங்கையில் ஊடுபயிராக நாட்டு வெங்காயம், மிளகாய் ,கடலை பயிரிடலாமா

பயிர் செய்யலாம். முருங்கையில் பாகல், புடலை ,பீர்க்கு ,கொடிவகை, பீன்ஸ் போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட முருங்கை மரம் தூணாக பயன்படுகிறது முருங்கையில் ஊடுபயிராக நிழலைத் தாங்கி வளரக்கூடிய காய்கறிகளை பயிரிடலாம். செடி முருங்கை பொதுவாகவே தனியாகவே சாகுபடி செய்யப்படுகிறது முருங்கையில் ஆணிவேர் அதிகமாகவும் சல்லி வேர் குறைவாகவும் காணப்படுவதால் ஊடுபயிறுடன் சத்துக்களும் போட்டியிடுவதில்லை

தென்னை மரம் வைத்து எட்டு ஆண்டுகள் ஆகிறது இன்னும் போ பிடிக்கவில்லை காயும் பிடிக்கவில்லை

தென்னை நுண்ணூட்டக் கலவையைவருடத்திற்க்கு மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் கொடுக்க வேண்டும் இதை இரண்டாக பிரித்து ஆறு மாதத்திற்கு அரை கிலோ என இரண்டு பகுதிகளாக வருடத்திற்கு இரண்டு முறை இடலாம். இதனால் சத்துக்கள் முழுமையாக பயன்படுத்தப்படும். இ ரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, போரான், காப்பர் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories