இலைக்கருகல் நோயை சரிசெய்ய வழிகள்……

தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலையால் நெற்பயிரில்,பாக்டீரியா இலைக்கருகல் நோய் பரவலாக காணப்படுகிறது.

நோயின் ஆரம்பநிலையில்,லேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள்,இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுவதால் இலைகள் காய்ந்து விடுகின்றன.

நோய் தீவிரமானால், புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்ககளை, இலைப்பரப்பில் உண்டாக்குகிறது. தூர் கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் நோய் உண்டாகும். நோய் தாக்கினால்,இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் கருகியது போலாகும். நோய் முற்றிய நிலையில்,அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிவதற்கு முன்பே காய்ந்துவிடும்.
“சூடோமோனஸ் புளூரசன்ஸ் ” என்ற எதிர் உயிர்க்கொல்லி மருந்தைக் கொண்டு ஈரவித்தை நேர்த்தி செய்ய வேண்டும்.

60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் மருந்தை கலந்து,60 கிலோ விதையை,ஒருநாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். அதன் பின்,முளைகட்டி நாற்றங்காலில் விதைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று அல்லது நான்கு முறையாக பிரித்து,மேல் உரமாக இடவேண்டும்.

யூரியா 5 மடங்கு,ஜிப்சம் 4 மடங்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஒரு மடங்கு விகிதத்தியில் கலந்து, ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் மேல் உரமாக இடலாம். விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40,50வது நாட்களில் இலைவழியாக, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மருந்து கரைசல் தெளித்தல் முறைகளில், பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories