கோடையில் கொய்யாவைத் தாக்கும் நோய்களும், அதை தடுக்க தீர்வுகளும்!

எல்லாக் காலத்திலும் மலிவான விலையில் கிடைக்கும் பழம் கொய்யா. விலை மலிவு என்பதால், இதன் மகத்துவத்தை மக்கள் தெரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்றே சொல்லலாம்.

கொய்யா சாகுபடி (Guava cultivation)
குறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கொய்யா சாகுபடி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவே,

சாதகமான சூழல் (Favorable environment)
நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும்.கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்றார்..

கவாத்து அவசியம் (The parade is essential)
குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு, 2 முறை கவாத்து செய்ய வேண்டும்.

நடவு செய்து, 5 மாதங்கள் கழித்துப் பூக்கத் தொடங்கும் போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும் மற்றும்,

இரட்டிப்பு மகசூல் (Double yield)
பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கும் என்றார்.

தேயிலைக் கொசுக்கள் (Tea mosquitoes)
குறிப்பாகக் கொய்யா தற்போது காய்ப்பு நடை பெற்று வருகிறது. கோடையில் கொய்யாப் பழங்களின் மேல் துளையிட்டு உள்ளிருக்கும் சாற்றை உறிஞ்சிவிடும்.

கருவாட்டுப் பொறி (Embryo)
இதனால் தோல் பகுதி கடினமாகி கருப்பு புள்ளிகள் ஏற்படும். இதைத் தவிர்க்க கருவாட்டுப் பொறி வைக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் (Neem oil)
1லிட்டர் தண்ணீரில் 2மி.லி வேப்ப எண்ணெய் மருந்து கலந்து தெளிக்கலாம்.

கூடுதல் மகசூலுக்கு (For extra yield)
மகசூல் அதிகரிக்க ஒரு மரத்திற்கு 10கிராம் யூரியா 5கிராம் வீதம் சிங் சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்

போரான் சத்து குறைபாடு (Boron deficiency)
போரான் சத்து குறைந்தால் இலை சிறுத்துவிடும். காயில் வெடிப்பும் காணப்படும்.இதனால் விற்பனை பாதிக்கும்.இவற்றைத் தவிர்க்க 3கிராம் போராகஸ் ஓரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories