தக்காளி செடியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்- பாதுகாக்கும் முறை!

தக்காளியைத் தாக்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் இலைச்சுருட்ட நச்சுயிரி நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நச்சுயிரி நோய் (Toxic disease)
தக்காளியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோயானது முதன்மையானது ஆகும். மேலும் இந்த நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது. இவற்றை கட்டுப் படுத்துவதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது என்றார்.

அறிகுறிகள் (Symptoms)
புதிதாக வளரும் தக்காளிச் செடியின் இலைகள் மஞ்சளாகிவிடும்.

பிறகு இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி படிப்படியாகக் குறைந்துவிடும்.

பச்சை இலைகள் அளவில் குறைந்து சுருங்கி நரம்புகள் மஞ்சளாக மாறிவிடும்.

இலைகள் மேல்நோக்கி சுருண்டு, கிண்ணம்போல் இருக்கும் பூக்கள் தோன்றும். ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்து விடும்.

பாதுகாக்க வழிகள் (Preventive measures)
வெள்ளை ஈக்களை கண்காணிக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைக்க வேண்டும்.

விளை நிலங்களைச்சுற்றி வரப்பு பயிர்களாக சோளம், கம்பு மக்காச்சோளம் போன்றவற்றை தக்காளி விதைப்பதற்கு முன் விதைக்கலாம்.

களைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

இமிடாகுளோரைடு அல்லது டைமெதோவேட்டை 0.05 சதவீதம் அதாவது ஒருலிட்டர் தண்ணிருக்கு 0.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து நடவு முடிந்த, 15-வது, 25-வது மற்றும் 45-வது நாட்களில் தெளித்தால், நோயைக் கட்டாயம் கட்டுப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories