தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

  • “பைட்டோப்தோரா பால்மிவோரா’ என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை பாதிக்கப்படும்.
  • அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலையில் பூசணம் வேகமாக வளர்ச்சி அடையும்.
  • நோய் பாதித்த தென்னையின் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறிவிடும். குருத்தின் அடிப்பாகம் பலம் இழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீசும். பாதிக்கப்பட்ட இளம் குருத்தை இழுத்தால் கையோடு எளிதில் வந்துவிடும்.
  • அறிகுறி கண்டவுடன் பாதிக்கப்பட்ட குருத்து பகுதிகளை வெட்டி எடுத்து எரித்துவிட வேண்டும்.
  • பின் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்டோ பசையை தடவினால் பூசணம் அழியத்துவங்கும்.
  • மேலும் இலைகளில் ஒரு சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 3 கிராம் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
  • தொழு உரம் 50 கிலோவுடன் வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 200 கிராம் கலந்து மரத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை இட்டால் நோய் கட்டுப்படும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories