பிளசரி நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த வாடிய இலைகளை பட்டுப்புழுக்கு உணவாக கொடுக்க கூடாது.
தூசி மண் படிந்த இலைகளை உணவாக கொடுக்காமல் ,தூய்மையான இலைகளை அளிக்க வேண்டும்.
புழு வளர்ப்பு அறையில் சரியான காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
புழு வளர்ப்பு அறையின் மேற்கூரை தென்னை அல்லது பனை ஓலைகள் அமைக்கப்படவேண்டும்.
இந்த மேற்கூரை வேயப்படமால் அறையின் உள்ளே வெப்பம் தாங்காமல் இருக்க கூரையின் மேற்புறம் அல்லது உட்புறமாக ஓலையால் வேயப்பட்ட வேண்டும்.
புழு வளர்ப்பு அறையின் ஜன்னல்களை ஈரம் சாக்குகளை பகல் நேரங்களில் தொங்கவிட வேண்டும். இதன் மூலம் வெப்பக்காற்று அறைக்குள் வராமல் தடுக்கப்படும். இதேபோல அறையின் உட்புறமாக சுவர் ஓரங்களில் மணல் குவித்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் .இந்த ஈரப்பதம்மூலமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும்.