பயிர்களில் வரக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள்
பொதுவாக அனைத்து பயிர்களிலும் நோயின் தாக்குதல்கள் வரும் அவை இலைப்புள்ளிநோய், வாடல்நோய், கருகல்நோய், வைரஸ்நோய், தண்டுஅழுகல்நோய், குருத்தழுகல்நோய், வேரழுகல் போன்ற நோயின் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது அவற்றை போக்க இயற்கைமுறையில் கட்டுப்படுத்தும் முறைகளைப்பற்றி பார்க்கலாம்.
பசுஞ்சாணக் கரைசல்
1கிலோ பசுஞ்சாணத்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கோணி சாக்கில் வடிகட்ட வேண்டும் வடிகட்டிய கரைசலில் மேலும் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வடிகட்டி பயிர்களுக்கு தெளித்தால் பாக்டீரியாவால் பரவும் அனைத்து நோய்களை கட்டுப்படுத்தலாம்
புதினாக் கரைசல்
250 கிராம் புதினா இலையை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் அதனுடன் 1-2 லிட்டர் வரை தண்ணீர் கலந்து பயிற்களுக்கு தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தால் அனைத்து நோய்களை கட்டுப்படுத்தலாம் நாம தேவைக்கேற்ப அளவை கூட்டிக்கொள்ளலாம்.
வசம்பு
வசம்புபொடி 10 கிராம் 60 மில்லி நீருடன் கலந்து வடிகட்ட வேண்டும் 50மில்லி கரைசல் கிடைக்கும் இந்த கரைசலில் நடவு செய்வதற்கு முன் விதைகளை அரை மண்நேரம் ஊறவைத்து நடவு செய்தால் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தலாம்
50 மில்லி வசம்புப்பொடி, 50 மில்லி கோமியத்தில் கலந்து விதையில் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம் பூஞ்சாண நோய்கள் அனைத்தும் கட்டுப்படும்.
கோமியம்
50 மில்லி கோமியம் அரைலிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் அனைத்தும் நோய்களை கட்டுப்படுத்தலாம்
பொதுவாக விதைநேர்த்தி செய்து விதைகளை நடவு செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்
ஒரு கிலோ விதைகளுக்கு 20 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் 20 கிராம் ஆறிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியுடன் கலந்து நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம்.
வாழையில் மற்றும் பல பயிர்களிலும் இலைப்புள்ளி, வாடல் மஞ்சள் புள்ளியடன் கூடிய கருகல்நோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ், பேசிலஸ் சப்டிலஸ் இவை லிக்யூடாக இருந்தால் பத்து லிட்டர் தண்ணீருக்கு 50 + 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம். பவுடராக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 + 100 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்