பயிர்களை தாக்கும் நோய்கள் பாக்டீரியாக்கள் ,பூஞ்சான் ,பிளாஸ்மா சைட்டோபிளாசம் மற்றும் வைராய்டுகள் போன்ற நச்சு உயிர்களாலும் சத்துக் குறைபாடுகள் மற்றும் சுற்றுப்புற சூழல்களில் கோளாறுகள் காரணமாகவும். உண்டாகின்றன.
நச்சுயிரிகள் மூலம் ஏற்படும் நோய்களும் மிக அதிகமாக பரவும் தன்மை உடையதால் அவற்றைக் கட்டுப்படுத்துவது சற்று கடினம்.
விதை சேமிப்பு உள்ள பாதிப்பு காரணம் என்ன?
தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகலால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன இதில் சுமார் 40 வகையான பூச்சிகள் விதைகளை தாக்குகின்றன இதனால் விதைகளின் தரமானதும் 5 சதம் வரை குறைகிறது.
முதலில் உள்ள பகுதியை குடைந்து சத்து பகுதி முழுவதையும் உண்டுவிடும். பிறகு வெற்று தோல்களை மட்டும் விட்டுச் செல்கின்றன இதனால் இவற்றின் முளைக்கும் திறன் பாதிக்கப்படும்..
சனப்பை பயிர் செய்வதில் உள்ள நன்மைகள் என்ன?
சணப்பை மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டது கலைகள் ஏதும் வள ராமல் கலை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கச் செய்யும்.
நன்கு வளர்ந்த சணப்பு பயிரை பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் காற்றில் உள்ள நைட்ரஜன் உறிஞ்சி மண்ணுக்கு தருகிறது.
சணப்பு பயிரின் தழை கள் நிலத்தில் மக்கிய மண்ணிற்கு தேவையான கரிம சத்துக்கள் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.
நெல்லில் வெண் நுனி நூற்புழுக்கள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
நெல் மற்றும் நடவு பொருட்களை சுடுநீரில் குறிப்பிட்ட வெப்பநிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருப்பதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
அந்தவகையில் நெல்லில் வெண் நுனி இலை நூர் புழுக்களை கட்டுப்படுத்த 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள சுடுநீரில் நடவு பொருட்களை 10நிமிடம் வைத்திருந்து எடுக்க வேண்டும்.
சிகப்பு சிந்தி மாட்டின் இயல்பு என்ன?
இந்திய நாட்டு மாடுகள் வரிசையில் இந்த சிகப்பு சிந்தி முக்கிய பங்கு வகிக்கிறது அதேசமயம் மற்ற நம் நாட்டு இனங்களை விட எளிதாக பராமரிக்க கூடியவை.
தென்னிந்திய சீதோசன நிலை தாங்கி வளரும் தன்மையுடையவை. அனேகமாக இந்த இனம் சிவப்பு வண்ணத்தில் இருப்பதால் சிகப்பு சிந்தி என்று அழைக்கின்றனர் காளைகள் வலிமையான உடல்வாகு கொண்டவை பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.