சின்ன வெங்காயம் 2 கிலோ வேப்பம் புண்ணாக்கும் 1o கிலோ பூண்டு இரண்டு கிலோ மூன்றையும் இடித்து 200 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்கள் ஊறவைத்தால் வெங்காய கரைசல் தயாராகிவிடும்.
அதன்பிறகு நுரையை வடிகட்டி தண்ணீர் கலக்காமல் அப்படியே பயிருக்குத் தெளிக்கலாம் .இது ஒரு ஏக்கருக்கு போதுமானது இதை வாரம் இருமுறை தெளித்து வந்தால் பூச்சித் தொல்லை இருக்காது.
தக்காளி செடியின் நுனியில் உள்ள இலைகள் பழுத்து விடுகின்றன அதை எவ்வாறு சரி செய்யலாம்?
கற்பூர கரைசல் தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் தக்காளி செடியின் நுனி பழுப்பதை தடுக்கலாம்.
முருங்கை மரத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு என்ன செய்யலாம்?
மண்புழு உரம் அமிர்த கரைசல் உயிர் உரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்களை பெறலாம்.
மீன் அமினோ அமிலத்தை இலைகள் மீது வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளையும் பெறலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.
நில கடலையில் வரும் இலைச்சுருட்டுப்புழு தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம்?
நிலக்கடலைக்கு சுண்ணாம்பு கரைசலை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
மேலும் தண்ணீரை தெளிப்பதால் நிலக்கடலையில் இலைத் சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தலாம்.
அதுமட்டுமல்ல புகையிலை வெட்டு புழுக்களின் தாக்குதல் குறைக்க ஆமணக்குச் செடியை வரப்பு பயிராக பயிரிடலாம்.
ஆடுகளின் சளியை போக்குவதற்காக இயற்கை வழிமுறைகள் யாவை ?
ஒரு மண் சட்டியில் நெருப்புப் க ட்டியை எடுத்து அதில் துளசி இலை நொச்சியிலை வசம்பு மற்றும் மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப எடுத்து நெருப்புடன் காட்டும்போது வரும் புகையை ஆட்டு கொட்டையில் பரப்பினால் ஆடுகளுக்கு ஏற்படும் சளியை போக்க முடியும்.