பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய தகவல்கள்!

பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய தகவல்கள்!

பண்டைக்காலம் முதலே மனிதர்கள் உண்டு வாழ்ந்தது அரிசி சாப்பாடு தான். அந்த அரசுகளிஅரிசிகள் நெல்லின் மூலம் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல வகையான நெல் ரகங்கள் இருந்தாலும் பாரம்பரியமாக சில நெல் ரகங்கள் கருதப்படுகின்றன அதைப்பற்றி இங்கு காணலாம்.

பாரம்பரிய நெல் ரகங்களில் இருந்துதான் பாரம்பரிய அரிசிகள் கிடைக்கின்றன.

பாரம்பரிய நெல் ரகங்களில் புழுதி கார் நெல், கல்லுருண்டை நெல், ஆளை குறுவை நெல் ,குழிவெடிச்சான் நெல் ,சிவப்பு நிற நெல் ,வெள்ளை குறுவை நெல் உள்ளிட்ட பல நிறங்கள் உள்ளன.

ஒவ்வொரு நெல்லுக்கும் ஒவ்வொரு குணம், சிறப்பும் உண்டு. இதில் புழுதிக்கார் நெல் புன்செய் நிலத்தில் விளையும் ரகமாகும் .இதன் சாகுபடி காலம் 120 முதல் 130 நாட்கள். இந்த நெற்பயிர் பொதுவாக 130 சென்டிமீட்டர் வரை வாழும் வளரும். ஒரு ஏக்கருக்கு 1.5 டன் மகசூல் கிடைக்கும். இந்த நெல் தானியம் தடிப்பாகவும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும்.

நெல் விதைப்பு செய்ய செப்டம்பர் முதல் பிப்ரவரி மற்றும் டிசம்பர் முதல் மார்ச் ஏற்ற காலங்களாகும். இந்த நெற்பயிரின் வயது 120 நாட்கள் மட்டும் 120 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும் .இந்த பயிருக்கு எவ்வித பூச்சி நோய்த் தாக்குதலும் இருக்காது.

ஆலை குறுவை நெல் ரகத்தை ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விதைப்பு செய்யலாம் இதன் வயது 130 முதல் 140 நாட்கள். இந்த ரகம் ஏக்கருக்கு 1,200 கிலோ மகசூல் கொடுக்க வல்லது.

குழிவெடிச்சான் நெல் ரகத்தை ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் பயிர் செய்யலாம்.வால் சிவப்பு ரக நெல்லை செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பயிர் செய்யலாம். வெள்ளை குறுவை நெல் ரகத்தை ஜூலை முதல் ஜனவரி வரை உள்ள காலங்களில் பயிர் செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories