பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்

பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்

பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்
நோய் மேலாண்மை
டிரைக்கோடெர்மா விரிடி:
கட்டுப்படுத்தும் நோய்கள்:
அளவு:
சூடோமோனஸ் புளூரசன்ஸ்:
வேர் உட்பூசாணம்(வேம்)
கட்டுப்படுத்தும் நோய்கள்:
பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:
பேசிலஸ் சப்டிலிஸ்
பூச்சி மேலாண்மை
மெட்டாரைசியம் அனிசோபிலே:
பவேரியா பேசியானா
பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ்:
பெசிலோமைசிஸ்:
என் பீவி வைரஸ்:

வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.  இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம்.

நோய் மேலாண்மை

 

டிரைக்கோடெர்மா விரிடி:

இது ஒரு பூஞ்சை வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:

பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் ஏற்படக்கூடிய வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துகிறது.மேலும் பல பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

அளவு:

விதைநேர்த்தி: 1கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.

நேரடி வயலில் இடுதல்: ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

சூடோமோனஸ் புளூரசன்ஸ்:

இது பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:
நெற்பயிரில் ஏற்படும் குலைநோய்,இலை உறை அழுகல் நோய்,இலை உறை கருகல் நோய்,பயறு வகைகளில் ஏற்படும் வாடல் நோய்,வாழை வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் அளவு:

🌱விதை நேர்த்தி:🌱1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.

🌱நேரடி வயலில் இடுதல்:🌱1 கிலோ சூடோமோனஸை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

🌱இலை வழி தெளித்தல்:🌱
0.2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.

வேர் உட்பூசாணம்(வேம்)

இது ஒரு கூட்டுயிரி பூஞ்சையாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:

பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:

ஏக்கருக்கு 5 கிலோ வேர் உட்பூசாணத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

பேசிலஸ் சப்டிலிஸ்

Bacillus subtilis பேசிலஸ் சப்டிலிஸ்
Bacillus subtilis பேசிலஸ் சப்டிலிஸ்

இது பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:
சாம்பல் நோய்,வேர் அழுகல்,நாற்றழுகல்,கிழங்கு அழுகல்,வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

🌱இலை வழி தெளித்தல்:🌱 ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

🌱நேரடி வயலில் இடுதல்🌱 : ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

பூச்சி மேலாண்மை

 

மெட்டாரைசியம் அனிசோபிலே:
Metarhizium anisopliae
Metarhizium anisopliae

இது ஒரு வகை பச்சை நிறமுடைய பூஞ்சாண வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

தென்னையில் தோன்றும் காண்டாமிருக வண்டிணை கட்டுப்படுத்துகிறது.

🌱பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:🌱 ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து மரங்களின் மேல் தெளிக்கவும்.

பவேரியா பேசியானா

இது ஒரு வகை வெண்மை நிறமுடைய பூஞ்சையாகும்.

🌱கட்டுப்படுத்தும் பூச்சிகள்🌱: பயிர்களில் தோன்றும் இலை உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

🌱பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:🌱 ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ்:

இது ஒரு பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும். புழுக்களின் வயிற்று பகுதியை பாதித்து விடுவதால் உணவு உண்ண முடியாமல் பாதிக்கப்பட்ட புழுக்கள் இறந்து விடுகின்றன.

🌱கட்டுப்படுத்தும் பூச்சிகள்:🌱 காய்கறிப் பயிர்கள் மற்றும் பருத்தியில் தோன்றும் காய் புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

🌱பயன்படுத்தும் முறை மற்றும்🌱 🌱அளவு:🌱 ஏக்கருக்கு 500 மிலி 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பெசிலோமைசிஸ்:

பயிர்களில் தோன்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு: ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் இடவும்.

 

என் பீவி வைரஸ்:

கட்டுப்படுத்தும் பூச்சிகள்: ஆமணக்கில் தோன்றும் புகையிலைப் புழு ,காய்கறி பயிர்கள் மற்றும் பருத்தியில் தோன்றும் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும்.பாதிக்கப்பட்ட புழுக்கள் செடிகளின் மேல்புறமாகச் சென்று தலைகீழாகத் தொங்கி இறந்து விடுகின்றன.

🌱பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:🌱 ஏக்கருக்கு 250 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

குறிப்பு:

உயிர் பூஞ்சாணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளை 30 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்கவும்.

இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலக்க கூடாது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories