கொத்துக் கலப்பை கொண்டு உழவு செய்வதால் என்ன பயன்?
கொத்துக் கலப்பை கொண்டு மண் கிளறுதல் மரபு சார்ந்த இயந்திரம் களை எடுத்தல் ஆகும்.
இதன்மூலம் இரண்டு களை களை மட்டுமே கட்டுப்படுத்த இயலும். பல பருவ மற்றும் வேர் ஊன்றி வேர் தொகுப்புடைய களைகளை கட்டுப்படுத்த முடியாது.
4 அடி நீளமுள்ள சதுரமான மரக்கட்டையில் துளையிட்டு முன்புறம் வளைந்து நீண்ட கொக்கி போன்ற கம்பிகளை அரையடி இடைவெளியில் அடிபாகத்தில் பொருத்தி கட்டையின் மீது நின்று கொண்டு உழவு செய்யப்பட்ட வயலில் ஓட்டுவதன் மூலம் அருகு தண்டுகளையும் கோரைக்கிழங்கு களையும் எளிதில் சேகரித்து அழிக்கலாம்.
கருவேப்பிலை பயிரை பூச்சித் தாக்குதலில் இருந்து எப்படி தடுக்கலாம்?
கருவேப்பிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் இரண்டு வகை மட்டுமே. 1 சாறு உறிஞ்சும் பூச்சி மற்றொன்று மாவுப்பூச்சி. கற்பூர கரைசல் மூலம் இவற்றை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
விதைகளின் இனத்தூய்மை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
விதைப்பயிர் தானியப் பயிர் அறுவடை செய்தல் கதிரடித்தல், தூற்றி சேமித்து வைத்தது, விதை சேதாரத்தை அதிகப்படுத்துவதுடன் விதையின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது.
விதைகளை உலர்த்தும் கருவிகள் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மருந்து கலக்கும் இயந்திரங்கள் போன்றவையும் ஒரு ரகத்திற்கு பயன்படுத்திவிட்டு வேறு இடத்திற்கு மாற்றும்போது நன்கு சுத்தம் செய்யாவிட்டாலும் விதை கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.
விதைகளை கோமிய கரைசலைக் கொண்டு இவ்வாறு விதை நேர்த்தி செய்யலாம்?
கோமியம் 500 மில்லியுடன் 2.5 லிட்டர் தண்ணீரை சேர்த்து கலக்க வேண்டும்.
விதைப்பதற்கு விதைகளை காடா துணியில் சிறு மூட்டை கட்டி கோமியம் கரைசலில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு நிழலில் உலர்த்திய பிறகு விதைக்க வேண்டும் இதனால் விதைகளின் மூலம் வரக்கூடிய பாக்டீரியா மற்றும் பூஞ்சாண நோய்களை தடுக்கலாம்.
பசுந்தீவனங்களை அளித்துக் க றவே உற்பத்தி அதிகரிக்க முடியுமா?
பசுந்தீவனங்களை அளித்து கறவை உற்பத்தியை பெற முடியும். சுமார் 6 முதல் 8 லிட்டர் பால் கறக்கும் பசுக்களின் 25 முதல் 30 கிலோ வரையில் பயறுவகை தீவனங்களுடன் உடல் எடைக்கு ஏற்ப பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.