மஞ்சளில் இலைச்சுருட்டு புழுவால் ஏற்படும் பாதிப்பு என்ன?

மஞ்சளில் இலைச்சுருட்டு புழுக்கள் இலைகளை மடித்து உள்ளே இருந்துகொண்டு அல்லது இலைகளின் ஓரத்தை வெட்டி சுருள் போன்று செய்து அதனுள் இருந்து இலையை தின்னும் இந்த தாக்குதல் ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை அதிகமாக இருக்கும்.

காய்கறி தோட்டம் அமைப்பதில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்னென்ன?

காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் செடிகளுக்கு நன்குவெயில் படுகிற ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

சாகுபடி செய்யும் நிலத்தின் மண்ணானது ஈரப்பதத்துடன் வடிந்து செல்லக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

கலைகளை எளிதில் கட்டுப்படுத்தும் வகையில் இடைவெளியுடன் செடிகளை நடவு செய்ய வேண்டும். பெரிய புதர்போல வளராத வகையில் செடிகளை நடவு செய்தால் பூச்சிகள் நோய்களிடம் இருந்து உண்டாகும் தீமைகளை தவிர்க்கலாம்.

உருளைக் கிழங்கு அறுவடை செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

உருளைக்கிழங்கின் தோலை போதுமான அளவு கடினப்பட்டு பிறகு அறுவடை செய்ய வேண்டும் மேலும் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லும் முன்பு நோய் பாதிப்புக்குள்ளான கிழங்குகளை நீக்கிவிட வேண்டும்.

நெல் பயிர் செய்யும் முன்பு ஏன் ஆழ உழ வேண்டும்?

மண்ணை ஆழ உழும் போது மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகளும் நோய்களும் கலைகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணிற்கு மேல் கொண்டு வரப்பட்டு அழி க்கப்படுகின்றன.

வான்கோழிகளுக்கு என்ன பசுந்தீவனம் கொடுக்கலாம்?

வான் கோழிகள் பொதுவாக பச்சை கீரைகளை விரும்பி உண்ணும் தீவனத்தில் நறுக்கிய பச்சைக் கீரைகள் சேர்த்துக் கொடுக்கலாம்.

பச்சைக் காய்கறி கழிவுகள் தருவதுடன் வேலிமசால் குதிரை மசால் போன்றவற்றைக் கொடுக்கலாம் இதனால் தீவன செலவு வெகுவாக குறையும் .

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories