மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்துவது எப்படி?…

மல்லிகை பதியன் போட மண்ணை தயார்படுத்தும் மல்லிகை விவசாயிகளே!
முதலில் மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது அவசியம்.

மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றும் பூஞ்சான நோயில் இருந்து கட்டுப்படுத்த பதியன் போடும் முன் ட்ரிக்கோடெர்மா விரிடி (trichoderma viridi) 1 கிலோகிராம்,சூடோமோனாஸ் (பிசூடோமோனஸ்) 1 கிலோகிராம் இரண்டையும், 20கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் வைத்து பின்னர் மண்ணுடன் கலப்பதால் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் இறந்துவிடும்.

பின்னர் காற்றின் மூலம் வரும் கிருமிகளை கட்டுப்படுத்த saff அல்லது Combo Plus என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3-4 கிராம் அளவில் கலந்து பதியனை நனைத்து மேலும் பதியன் தூரில் நனையச் செய்ய வேண்டும்.

பத்து நாட்கள் இடைவெளியில் 3 முறை இதேபோல் மருந்தை தண்ணீரில் கலந்து பதியனை நனைத்து பாதுகாப்பதன் மூலம் மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories