மாமரத்தில் வளரும் கருகல் நோய் எப்படி கட்டுப்படுத்தலாம்?

கருகல் நோய்கள் கண்ட மாமரத்தில் இலைபட்டைகளைபூஞ்சனால் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும் இந்தபூஞ்சான்கள் காற்றில் பரவி அருகிலுள்ள கன்று மரங்களைத் தாக்கும்.

இந்த கட்டுப்படுத்த ஆரம்ப நிலை1o லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்பெண்ணையை இலைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றை நன்கு படும்படி தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பூச்சிகள் மூலமாக நோய் எப்படி பரப்பப்படுகிறது?

பூச்சிகள் செடிகளையும் உண்பதால் சில நச்சு உயிர் மைக்கோ பிளாஸ்மா போன்ற நோய் கிருமிகள் பரப்புகிறது.

நோய் உள்ள செடிகளில்நோய்க்கிருமிகளை சேர்த்து உட்கொண்டு பின்னர் நோயற்ற செடிகளில் செடிகளின் எச்சிலுடன் கலந்து கிருமிகளை பரப்புகிறது.

அஸ்வினி, வெள்ளை மாவு பூச்சி ,தத்துப் பூச்சிகள், வண்டுகள் போன்ற பூச்சிகள் நச்சுயிரி மற்றும் மைக்கோ பிளாஸ்மா போன்ற கிருமிகளை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுரக்காய் நடுவதற்கு ஏற்ற ரகங்கள் என்னன்னா?

ஜூன் ஜூலை, டிசம்பர் ஜனவரி, மாதங்கள் சுரைக்காயில் வரத் ஹைபிரிட் கௌரவ் பிரசாத் யூ எஸ் 12 112 ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றது.

ஒரு எக்டருக்கு 1.8 கிலோ விதையை நீல அகலம் முறையில் 180 க்கும் 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால் 115 முதல் 130 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.

ஏன் கொய்யாவில் அடர் நடவு முறை சிறந்தது?

கொய்யா அடர் நடவு முறை3×6 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் இந்த முறை நடவு ஏக்கருக்கு சுமார் 2 ஆயிரம் செடிகள் நடவு செய்யலாம்.

பாரம்பரிய முறைப்படி ஏக்கருக்கு 15×15 அடி இடைவெளியில் 2oo செடிகள் மட்டுமே நடவு செய்யலாம்.

எனவே அடர் நடவு முறை மூலம் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள செடிகளைஒரே ஏக்கரில் நடவு செய்யலாம்.

கறவை மாடுகளின் பால் மடியில் நோயின் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக பால் கரக்கும் பிறகு பாலை காம்பில் துவாரங்கள் சுமார் 30 நிமிடங்கள் திறந்த நிலையில் இருக்கும்.
எனவே பால் கறக்கும் பிறகு பசுக்களைஉடனே தரையில் படுக்க செய்தல் கூடாது.

பால் கறவைக்கு பிறகு பசுக்களுக்கு தீவனம் அளிப்பதன் மூலம் பசுக்களை நிற்கச் செய்து அத்தகைய மடிநோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories