முந்திரி மரத்தில் நுனி கருகல் நோய் எப்பொழுது வரும்?

 

முந்திரி மரத்தில் தோன்றும் நுனி கருகல் நோய் ஒரு பொதுவாக நோய் ஆகும்.

பாதிக்கப்பட்ட மரத்தின் கிளைகளில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூஞ்சை வளர்ந்து இலைகலில் ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும். தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகம் ஏற்படும்.

சேனைக்கிழங்கு எப்படி நடவு செய்வது?

வடிகால் வசதியுடைய மண்ணில் வளரும். முந்தைய பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் நடவிற்கு ஏற்றவை.

மொட்டு உடன் கூடிய கிழங்குகள் ஆறு முதல் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அரும்புகள் நீக்கப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.

ஒரு ஏக்கரில் நடவு செய்ய சுமார் 3 ஆயிரத்து 500 விதைக் கிழங்கு தேவைப்படும்
.
நெல் இலைச் சுருட்டுப் புழுவின் ஏற்படும் தாக்கம் என்ன?

ந வரை பட்டமான டிசம்பர் -ஜனவரி மாதங்களில் நெல்லின் பால் பருவத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவானது இ லையில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் பயிர்கள் வெறுத்துப் போயிருக்கும் .இதனால் பச்சையம் இல்லாமல் ஒளிச் சேர்க்கை குறைந்து பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும்.

நிலக்கடலையை எப்படி நடவு செய்து நீர் பாய்ச்ச வேண்டும்?
பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒவ்வொன்றாக ஊற்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நிலக்கடலையை பொருத்தவரை வாட விட்டு பிறகு தண்ணீர் பாய்ச்சினால் மகசூல் நன்றாக இருக்கும்.

கால்நடைகளுக்கு வரும்புல் வலிப்பு நோய் பற்றி கூறுக?

கால்நடையின் ரத்தத்தில் உள்ள மெக்னீசியம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது.

இது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இது கோதுமை புர்கள் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

இது இளம் கன்றுகளின் பால் ஊட்டத்தை குறைகிறது. எல்லா வயது மாடுகளையும் இது தாக்குகிற.

கால்நடைகள் சதைப்பற்றுள்ள வளர்ச்சியடையாத புர்களைமேய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories