வானிலை மாற்றத்தால் பயிர்களில் ஏற்படும் நோய்கள்!அதை தீர்க்கும் வழிகள்!

வானிலை அடிப்படையில் வேளாண் துறையினர், பல்வேறு சாகுபடியில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

வானிலை மாற்றம் (Climate change)
பொதுவாக பயிரின் வளர்ச்சியைப் பொருத்தவரை, வானிலையையும் மிக முக்கியப் பங்கு ஆற்றுகிறது. சாதகமான வானிலை, பயிரின் வளர்ச்சியைத் தூண்டச் செய்கிறது. அதேநேரத்தில் பாதகமான வானிலை, நோய்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது என்றார்.

எனவே வானிலை மாற்றத்தினால், பயிர்கள் பாதிக்கப்படுவது உறுதி. அத்தகைய மாற்றங்களைக் கணித்து, அப்போது தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக முக்கியம்.

வேளாண் ஆலோசனைகள் (Agricultural Advice)
இதுகுறித்து சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம் சார்பில் வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனை குறித்து, சந்தியூர் வேண அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:

வரும் 14ம் தேதிவரை லேசான தூறல் மழையை எதிர்பார்க்கலாம். வெப்பநிலை 22 செல்ஷியஸ் முதல் 37 செல்ஷியஸ் வரை இருக்கும் என்றார்.

காற்றின் வேகம் மணிக்கு 5 கி.மீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பயிர்களில் ஏற்படும் நோய்களும், அதற்கான தீர்வுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆமணக்கு (Castor)
அதன்படி, ஆமணக்கில் காய் துளைப்பான் நோயும், அதனைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு புரப்பனோபாஸ், 50,இ.சி- 500 மில்லி, லிட்டருக்குத் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளம் (Corn)
மக்காச்சோளத்தில் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு மேகன்கோஜேப் -1 கிலோ, நடவு செய்த 20 நாட்களுக்குக்குப் பின் தெளிக்க வேண்டும்.

உளுந்து
உளுந்து பயிரில் பூ உதிர்வை தடுக்க, வறட்சியைத் தாங்கி வளர, ஊட்டச்சத்து நிறைந்த பயிர் ஒண்டர் – 2 கிலோவை, 200 லிட்டர் தண்ணிரில் கலந்து, ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
எள்ளு பயிரில் பாக்டீரிய இலக் கருகல் நோயைத் தவிர்க்க, குஸ்டெப்ட்ரோசைகளின், 500பி.பி.எம்., மருந்தை, ஏக்கருக்கு, 120 கிராம் வீதம் தெளிக்க வேண்டும் மற்றும்

தக்காளி (Tomato)
வானிலையால், தக்காளியில் வெள்ளை ஈத் தாக்கம் அதிகம் தென்படும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஹெக்டேருக்கு 12 வீதம் வைக்க வேண்டும்.

வாழை(Banana)
வாழையில் குருத்து சுருட்டு அழுகல் நோய் தாக்கம் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த மெக்கோஜேப்- 75 சதவீதம், ஒரு ஹெக்டேருக்கு 1.5 -2 கிலோ வீதம் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.

பருத்தி (Cotton)
பருத்தியில் இலைக்கருகல் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்பட்டால், ஹெக்டேருக்கு, மேங்கோசெப் -2 கிலோ என்ற அளவில், 2 அல்லது 3 முறைற 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories