வாழையில் இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்த 300 மில்லி போதும்?

பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லிவேப்பங்கொட்டை கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் நோயை கட்டுப்படுத்தலாம்.

தக்காளியில் ஊடுபயிராக எதை பயிரிடலாம்?

தக்காளி பயிர்களுக்கு இடையில் செண்டு மல்லியில் நிலத்தை சுற்றிலும் வயல் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிட வேண்டும்.

செண்டுமல்லி காய் பொருட்களையும் மக்காச்சோளம் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தேவை இல்லை.

தேனீக்களினால் பயிர்களின் மகசூல் அதிகரிக்குமா?

தேனீக்கள் தேன் மற்றும் தேன் மெழுகு போன்ற மிகவும் மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் பயிர்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.

தேனீக்கள் தேன் மற்றும் தேன்மெழுகு கொடுப்பதை விட 10 முதல் 20 முறை அதிக பலனை தருகிறது பிரிவுகள் குதிரைமசால் மற்றும் தீவன புல் போன்ற பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் மிக முக்கியமானதாகும்.

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி பசுமை புரட்சி ஆகியவற்றின் தாக்குதலும் இருந்தால் இவற்றைக் கட்டுப்படுத்தலாம் மாலை நேரங்களில் விளக்குப்பொறி வைப்பதுடன் வேப்பங்கொட்டைச் சாறும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை தடுக்க மஞ்சள் விளக்கு போட்டு பொரி காய் புழுக்களின் தாக்குதல் உள்ள இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி கட்டுப்படுத்தலாம்.

பப்பாளியில் உள்ள உர மேலாண்மை பற்றி கூறுக?

பத்தாவது நாள் கன்றின் தூரியில் ஒரு லிட்டர் தண்ணீர் 3 கிராம்சூடோமோனஸ் 3கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை கலந்து ஊற்ற வேண்டும்.

25வது நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகாவியம் 30 மில்லி ரைசோபியம் ஆகியவற்றை கலந்து கன்றின் துறையூரில் ஊற்ற வேண்டும்.

பத்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவியம் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

20 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

60-வது நாள் ஒவ்வொரு தூரியில் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு 100 கிராம் ஆமணக்குப் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து விட வேண்டும்.

2 மாதங்களுக்கு பிறகு மண்புழு உரம், 2 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை தூர் பகுதியில் இட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories