வாழையில் காஞ்சார நோய் தாக்குதல்

வாழையில் காஞ்சார நோய் தாக்குதல் ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்களாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்பிற்கு பரவி கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது..
இலைகளுக்கும் பரவி வாழைமரத்தில் உள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றது. பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதியில் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்குகின்றன. தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும்.
சில சமயங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும். பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை. அப்படியே தார்வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படு பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பங்கொட்டை கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் நோயை கட்டுப்படுத்தலாம்.
வாழை நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடொமா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசேன்ஸ் ஆகிய எதிர் உயிர் கொல்லிகளை அரைகிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்யவும்.
வாழைமரத்தில் பூஞ்சானத்தினால் காற்றின் மூலம் காஞ்சாரை நோய் பரவக்கூடியது. இந்த நோய் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது நோயின் தாக்கம் தீவிரமடைகிறது. இதனை கட்டுப்படுத்த வாழை தோட்டங்களில் பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷ் உரம் கூடுதலாக இட வேண்டும். களைகள் வளர விடாமல் பூ பூப்பதற்கு முன் வெட்டிவிடனும். நோய் தாக்குதலுக்கு ஆளான இலைகளை அறுத்து தீ வைத்து அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதல் பெரும் அளவில் குறைந்து விடும். சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், பேசிலஸ் சப்டிலஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் இ சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பேசிலஸ் சப்டிலஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்டைவெளி குறைவாக நடவு செய்வது தான். காஞ்சாரை நோய் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக இருந்த இந்த நோய் தற்போது தீவிரமடைந்துள்ளது. பச்சை இலைகள் கருகி சோகைகளாக நிற்கிறது. இதனால் மகசூல் பாதிக்கும்
நோய் தாக்கிய மரங்களிலிருந்து சோகைகளை அப்புறப்படுத்தி எரிக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை குறைக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories