வெங்காயத்தில் அடிச்சாம்பல் அழுகல் நோய்! கட்டுப்படுத்தும் வழிகள்!

டி.என்.பாளையம் பகுதியில் வெங்காய பயிர்களை (Onion Crops) அடிச்சாம்பல் மற்றும் அழுகல் நோய் தாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறை அதிகாரி தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

வெங்காயப் பயிர்களில் நோய்த் தாக்குதல்:
டி.என்.பாளையம் வட்டாரத்தில் கவுண்டம்பாளையம், கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 185 எக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் (Small Onion) பயிர் செய்துள்ளனர். தொடர்ச்சியாக பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக இங்குள்ள தோட்டங்களில் சாகுபடி (Harvest) செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்களில் அடிச்சாம்பல் நோய் தாக்கம் மற்றும் அழுகல் நோய், இலைப்பேன் என்ற பூச்சியின் தாக்கமும் தென்படுகிறது.

சிக்கனம்
வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் (Drip irrigation) அமைத்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை சுற்றிலும் 0.25 சதவீதம் காப்பர் ஆக்சி குளோரைடு (Copper oxychloride) அல்லது 0.1 சதவீதம் காப்பர் ஹைட்ராக்சைடு கரைசலை மண்ணில் வேர்கள் நனையும் படி ஊற்ற வேண்டும். பயிர் நட்ட 30-ம் நாள் 2.5 கிலோ சூடோமோனஸ் (Pseudomonas) அல்லது 4.5 டிரைக்கோடெர்மா விரிடியை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். அடிச் சாம்பல் நோயை கட்டுப்படுத்த மாங்கோசெப் 2 கிராம், 1 லிட்டர் மேண்டி புரோப்பா மை அல்லது புரோப்பிநெப்பை 2 மில்லி லிட்டர் அளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து 10-12 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தியாகராஜன் கூறினார்.

இலைப்பேன்
இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பகுதி மற்றும் குருத்து இலைகளுக்குள் கூட்டம் கூட்டமாக இருந்தபடி இலைகளின் பச்சையத்தை சுரண்டியும் சாற்றை உறிஞ்சியும் சேதம் விளைவிக்கிறது. வளர்ந்த பூச்சிகள் மிக சிறியதாகவும், கடும் பழுப்பு நிறத்தில் பேன் போன்று தோற்றமளிக்கும். தாக்கப்பட்ட பகுதிகள் இளம் வெண்மை நிற படைகளாக மாறி விடும். பூச்சிகளின் (Pest) தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள் நுனியில் இருந்து கீழ் நோக்கி கரிந்தும் திரிந்தும் காணப்படும். இதன் தாக்குதலால் மகசூல் (Yield) அதிகம் பாதிக்கப்படும்.

கண்காணிக்க வேண்டும்
மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஹெக்டருக்கு 10 என்ற அளவில் பயிருக்கு மேல் 15 செ.மீ. உயரத்தில் இருக்கும் படி வைத்து கண்காணிக்கவும். வேப்ப எண்ணெய் (Neem oil) 3 சதவீதம், வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் போன்றவை இலைப்பேன் இனப்பெருக்கத்தினை குறைத்திட உதவி செய்கிறது என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories