வெண்டயில் மஞ்சள் தேமல்நோய்
வெண்டயில் மஞ்சள் தேமல்நோய் தாக்கிய செடிகள் வளர்ச்சி குன்றி இலைகளின் நரம்புகளுக்கிடையே உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறிக் காணப்படும். செடிகளில் பூக்கள் மற்றும் காய்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். நோயினை உண்டாக்கும் நச்சுயிரியினை வெள்ளை ஈ பரப்புகிறது. 5மூ வேப்ப விதைக் கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். நோயினால் தாக்கப்பட்ட செடிகளை உடனுக்குடன் பிடுங்கி விட்டு வெள்ளை ஈ பரவாமல் இருக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை பயிர் செய்யலாம். வயல் வரப்புகளில் களைச்செடிகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்து நோயின் மாற்று உறைவிடங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.