அங்கக வேளாண்மை – காய்கறித் தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயத்தில் தவிர்க்க முடியாத ஓன்று பூச்சி மேலாண்மைதான். அதுவும் ரசாயன விவசாயத்தை விட இயற்கை விவசாயத்தில் பூச்சி கட்டுப்பாடு என்பது கூடுதல் சவாலாகத் திகழ்கிறது.

ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால் மிகவும் சுலபமாக இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடலாம்
மற்றும்
வருமுன் காப்போம் (Let’s save before it comes)
வருமுன் காப்போம் என்பது இயற்கை விவசாயத்தில் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய ஓன்று .

உதாரணமாக தக்காளிச் செடியை முக்கியமாகத் தாக்க கூடியது என்றால் அது காய் புழுதான். இதனைக் கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறையோ பூக்கள் வைத்ததிலிருந்து இயற்கை பூச்சி விரட்டிகளை நாம் தெளித்து கொண்டே இருக்கவேண்டும் என்றார்.

சரி காய்கறித் தோட்டத்தில் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ் மற்றும் வெர்டிசீலியம் லக்கானி (Basilus trunciensis and Verticillium lacchani)
இயற்கை விவசாயத்தில் நீங்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டியது இந்த இரண்டு பொருட்கள். இவை மிகப்பெரிய புழுக்களையும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தக் கூடியத் தன்மை படைத்தவை.

10 லிட்டருக்கு 50 மில்லி (50 ml per 10 liters)
காய்கறிகளைப் பயிர்கள் செய்ய ஆரம்பித்தவுடன் இதை வாங்கி வைத்து கொள்வது சாலச் சிறந்தது. ஆனால் இதை இயற்கை பூச்சி விரட்டிகள் சரியான சமயத்தில் செய்யவில்லை அல்லது கைவசம் இல்லை என்கிற சமயத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். ஏக்கருக்கு 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் .

வேப்ப எண்ணெய்க் கரைசல் (Neem oil solution)
இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்க கூடியது வேப்பஎண்ணெய் . ஒரு புழுவாக இருந்தாலும் சரி, பூச்சியாக இருந்தாலும் சரி, ஒரு செடியில் முதலில் தாக்கப்படுவது இலைகள்தான். அதனைத் தடுக்க வேப்ப எண்ணெய் பெரிதும் உதவுகிறது என்றார்.

இது பூச்சிகள் வேகமாக பரவுவதைத் தடுக்கும் ஒருதடவை தெளித்தால் அதன் வீரியம் அதிகபட்சமாக 22 நாட்கள் வரை இருக்கும் . எனவே அறுவடை சமயங்களில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

பொறிப் பயிர் (Engine crop)
பூச்சிகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்த கூடியது இந்த பொறிப் பயிர்கள் . தாய் பூச்சிகள் முக்கிய பயிர்களில் முட்டையிடுவதைத் தவிர்க்க, நாம் வரப்பை சுற்றி அல்லது ஊடு பயிராகப் பொறி பயிர்களைப் பயிரிடலாம். நாம் எந்த காய்கறி பயிர் செய்கிறோமோ, அதற்கு ஏற்றபடி பொறிப் பயிர்களைத் தேர்வு செய்யவேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டிகள் (Natural insect repellents)
பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கைப் பூச்சி விரட்டிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது . தயாரிப்பதும் சுலபம், இதற்கான செலவும் குறைவு. ஆனால் இதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான தயாரிப்புகளை நீண்டநாட்கள் வைத்திருக்க முடியாது. அதிகபட்சம் 3 முதல் 7 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்கலாம்.

பூச்சி விரட்டிகள் (Insect repellents)
1) இஞ்சி- பூண்டு கரைசல்
2) ஐந்திலை கஷாயம்
3) பத்திலை கரைசல்
4) கற்பூரக்கரைசல்
5) அக்னி அஸ்திரம்
6) இஞ்சி-பூண்டு பச்சைமிளகாய் கரைசல்

இதேபோல், பல இயற்கை மருந்துகள் உள்ளன. ஆனால் அவற்றை பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் பொருத்தவரை நேரம் முக்கியம். பூச்சியை கட்டுப்படுத்த 20ஆம் நாள் தேவை என்றால் 19வது நாளே தயாராக இருக்கவேண்டும்.

ஒட்டுண்ணி அட்டைகள் (Parasitic cards)
காய்கறித் தோட்டத்தில் தாய் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குறைந்தது 12 மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை வைக்கலாம்.

சோலார் விளக்கு பொறி (Solar lamp trap)
இதற்கு கொஞ்சம் பணம் அதிகம் செலவிட வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் நல்ல பலன் கொடுக்கும் . ஏக்கருக்கு இரண்டு வைக்கலாம். குறைந்தது 7 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்று கூறினர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories