அஸ்வகந்தா பற்றிய தகவல்கள்

அஸ்வகந்தா பற்றிய தகவல்கள்

அஸ்வகந்தா மிகவும் குறுகிய காலத்தில் வளரும் மருந்துச் செடி ஆகும். வறண்ட நிலங்களில் நன்றாக வளரும். அஸ்வகந்தாவின் வேர்களில் அதிக மருத்துவ குணம் உள்ளது.

தாவர இயல்பு

அந்தஅஸ்வகந்தா சொலான குடும்பம் வகையைச் சேர்ந்தது. இலையுதிர் காலத்தில் 13 முதல் 170 சென்டி மீட்டர் உயரம் வரை வளரும் கொண்டது.

செடிஅமைப்பு

அஸ்வகந்தா செடியின் தண்டு பகுதி அதிக ரோமங்கள் மற்றும் அதிக கிளைகள் உடையதாக இருக்கும். இலைகளில் வட்ட வடிவிலும் இலையின் நுனி கூர்மையாகவும் மலர்களின் தன்மை கொண்டதாகவும் இலை நடுப்பகுதியிலிருந்து தோன்றும்.

ரகங்கள்

அடர்ந்த பச்சை இலைகள் இளம் வெளிய மலர்கள் காய்கள் முதிர்ந்த உடன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.

இது ஜம்முவில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

வளரும் மண்

அதிகம் கரிசல் அல்லது சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரும். மேலும் நன்கு வடிகால் வசதி கொண்ட மண்ணில் சாகுபடி செய்ய ஏற்றதாக இருக்கும்.

விதைபு நேரம் ஜூலை மாதம் விதைப்பு செய்ய வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதல்

பூச்சித்தாக்குதல் குறைவாக தான் இருக்கும்.

ஆனாலும் நாற்று அழுகல் இலை அழுகல் போன்ற நோய்கள் தாக்கலாம்.

அறுவடை நடவு செய்த 170 முதல் 180 நாட்களில் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை பயிர்களை அறுவடை செய்யவேண்டும். மண்ணிலிருந்து இதன் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு வேர்ப்பகுதி தோண்டி எடுத்து உலர்த்த வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories