இஞ்சித் தாக்கி மகசூலை குறைக்கும் குருத்து துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள்..

இஞ்சியைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளில் பெரும்பான்மையானதும், முக்கியமானதும் “குருத்துத் துளைப்பான்” பூச்சி.

இது இஞ்சியைத் தாக்கி அதனை சேதப்படுத்தி மகசூலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த குருத்துத் துளைப்பானை கட்டுப்படுத்துவது எப்படி?

அ.. பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.

ஆ. தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

இ. விதைக் கிழங்குகளை டைகுளோரிவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நட வேண்டும்.

ஈ. மோனோ குரோட்டோபாஸ் 2.0 மி.லி. அல்லது குளோன்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் குருத்துத் துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்..

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories