பாலக்கீரை செடியில் பூச்சி தாக்குதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பாலக்கீரையை செடியில் பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதை சமாளிக்க நொச்சி , பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
மாங்கன்று நடவு செய்யும் முன்பு நிலத்தை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
மாங்கன்று நடவு செய்வதற்கு நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவேண்டும் பிறகு ஒரு மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் ஒரு மீட்டர் ஆழமும் உள்ள குழியை செடிகள் நடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வெட்ட வேண்டும்.
பின்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும் மேலும் அந்தக் குழியில் வேப்பம் புண்ணாக்கு மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு தயார் செய்ய வேண்டும்.
மக்கிய உரத்தை பயன்படுத்துவதால் என்ன பயன்?
மக்கிய உரத்தின் நிலத்தில் இடுவதால் மண் போல போல என பயிர் இலகுவாக வளர உதவுகிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை பெருக் குகிறது.
மண்ணின் வளத்தை அதிகரித்து பயிருக்குத் தேவையான காற்றோட்டத்தை வே ர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது.
கழிவுப்பொருட்கள் நிலத்திலும் மேலும் மட் க்கும் போது கலைகளும் நோய்க்கிருமிகளும் அழைக்கப்படுகின்றன.
இஞ்சி மூலம் என்னென்ன பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்?
அஸ்வினி, இலைப்பேன், இலைப்புள்ளி அமெரிக்கன் படைப்புழு, வெள்ளை பயறு வண்டு, வேர்முடிச்சு புழு காய்த்துளைப்பான் போன்ற பூச்சிகள் மற்றும் நெல் செம்புள்ளி இலை நரம்பு தேமல் நோய் முதலியவற்றை இஞ்சி பொடி அல்லது இஞ்சி கரைசல் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சினையான சில கறவை மாடுகளில் சினை தருணத்தில் தோன்றுவது போன்று பிறப்பு உறுப்புகளில் கண்ணாடி போன்று நீர்வடிதல் ஏற்படும் இதற்க்கு காரணம் என்ன? இந்த பிரச்சினைகளை எவ்வாறு குணப்படுத்தலாம்?
இத்தகைய அறிகுறி கர்ப்ப கால சினை அறிகுறி கள் எனப்படும். முந்தைய காலங்களில் கர்ப்பப் பையில் சினைமுட்டைகள் அதிக அளவில் சில பசுக்களில் உற்பத்தியாகி அதன் மூலம் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் உற்பத்தியாகும் என்பதால் இத்தகைய அறிகுறிகள் தோன்றும்.
இது சினையுற்ற கரவை மா டுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை மேலும் இதற்காக தனிப்பட்ட சிகிச்சையும் மேற்கொள்ள தேவையில்லை.