இந்த யுத்தி விவசாயத்தின் சக்தி!

 

மா, கொய்யா,சப்போட்டா போன்ற பழ தோட்டங்களில் அதிகளவில் அணில்களின் நடமாட்டம் இருக்கும். பழத் தோட்டத்தில் அணில்கள் வராமல் விரட்ட ஒரு கைப்பிடி அளவிலான பூண்டை அரைத்து 4 லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தால்பூ ண்டு வாசனையால் அணில்கள் ஓடி விடும் மேலும்பழ தோட்டத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

தென்னை மரத்தில் அதிக காய் காய்க்க தென்னம்பாளையில் ஒரு செங்கலை கட்டித் தொங்க விடுவதால் பாளையில் உள்ள குரும்பைகள் கீழே கொட்டாமல் அதிகமாக காய்க்கும்.

அதேபோல் காய் பிடிக்காத தென்னை மரத்தில் பாளை களுக்கு இடையில்கொழிஞ்சியை வைத்தால் காய்கள் நன்றாக பிடிக்கும்.

மேலும் அவரையில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் காய்த்துளைப்பான் ஒன்றாகும். இதை கட்டுப்படுத்த தண்ணீருடன் வேப்ப எண்ணெய் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

அவரை செடிகளுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் விளைவிக்கும் பொருட்களும் இயற்கையாக இருக்கும் .நாம் அதிக லாபம் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories