இயற்கை பூச்சிகொல்லியானபெவேரிய பேசியானா!

ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் விளைநிலங்கள் விளைபொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது இந்த நிலையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகளையே உபயோகிப்பதே நல்லது அதை தொடர்ந்து பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லி பற்றி இங்கு காணலாம்.

பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளுக்கு நோய்களை ஏற்படுத்தி அந்த பூச்சிகளை அழிக்கும் திறன் இந்த பூச்சிக்கொல்லிக்கு உண்டு.

10 கிராம் பெவேரியா பேசியானா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

பெவேரிய பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லி ஆனது நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு,இலை பிணைக்கும் புழு , கொம்பு புழு கூண்டுப்புழு ,குட்டை கொம்பு வெட்டுக்கிளி,முள் வண்டு , புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சி ஆகிய பல பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் ,மேலும் தக்காளியில் பழ தூளப்பான் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது .மணிலா , பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சைமிளகாய் கனகாம்பரம் போன்ற செடிகளை தாக்கும் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

கேந்தி மலரை தாக்கும் பச்சைப் புழு மற்றும் புரடீனியா புழு ஆகியவற்றின் கட்டுப்படுத்தும். மேலும் பருத்தில் உள்ள காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு கரும் பு தண்டுதுளைப்பான் தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் கூன்வண்டு போன்றவற்றையும் இந்த பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லி கட்டுப்படுத்தும். மா மரத்தில் தோன்றும் இ லை மற்றும் பூ பிணக்கும் புழு தேக்கு மர தூ லைப்பான் வாழையில் கூன் வண்டு போன்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories