பூஞ்சான நோய் தாக்கி பாதிக்கப்பட்டுள்ள பழத்தை எப்படி சரி செய்யலாம்?
காய்கள் காய்க்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் சூடோமோனஸ் கலந்து காய்கள் மீது தெளித்து வருவதன் மூலமும் பூஞ்சான நோய் தாக்குவதைத் தடுக்கலாம்.
கறவை மாடுகளுக்கு எவ்வளவு அடர்தீவனம் அளிக்க வேண்டும்?
கறவை மாடுகளுக்கு பால் கறக்கும் அளவினைப் பொறுத்து தீவனம் அளிக்கவேண்டும். பொதுவாக கறவை மாட்டின் உடல்நிலை பராமரிப்பிற்கு 1.5 கிலோ அடர் தீவனமும் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும்.
உருளைக் கிழங்கில் அழுகல் நோய் அதிகமாக உள்ளது அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
ஒரு லிட்டர் தண்ணீரில் தலா 4 கிராம் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்து பிறகு விதைக்கலாம் அல்லது பஞ்சகாவியம் பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்யலாம். இதன்மூலம் உருளைக்கிழங்கில் வரும் அழுகல் நோயை தடுக்கலாம்.
மாடுகளின் பாலில் கொழுப்புச் சத்து அதிகரிக்க எந்த தீவனம் அளிக்கலாம்?
பருத்திக் கொட்டை புண்ணாக்கு ,நிலக்கடலை புண்ணாக்கு போன்றவற்றை கொடுக்கலாம்.
இலைச்சுருட்டுப் புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை?
இலைச்சுருட்டு தாக்கத்தையும் கட்டுப்படுத்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசலைத் தெளிக்கலாம்.
ஏழு நாட்கள் ஒரு முறை அக்னி அஸ்திரம் தெளிப்பதன் மூலம் இல்லை புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
சவுக்கு மரம் நன்றாக வளர என்ன உரம் கொடுக்கலாம்?
வாரம் ஒரு முறை மேம்படுத்தப்பட்டது அமிர்தகரைசலை நீர்ப் பாசனத்துடன் கலந்துவிடலாம்.
மேலும் மாதம் இரண்டு முறை தொழு உரத்துடன் உயிரி உரங்களை கலந்து இடலாம்.
குருத்துப் பூச்சி தாக்குதலை எவ்வாறு தடுக்கலாம்?
குருத்துப் பூச்சி தாக்குதலை தடுக்க வேம்பு,புங்கன் கரைசல் தெளிக்கலாம்.
பஞ்சகாவ்யா கரைசலை வாரமிருமுறை தெளிக்கலாம் இதன் மூலம் குருத்துப் பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம்.